தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஏழு லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்ப உதவி செய்துள்ளேன்' - சோனு சூட்

ஹைதராபாத்: ஊரடங்கு காலத்தில் 7 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்ப உதவி செய்துள்ளேன் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

By

Published : Feb 18, 2021, 10:43 PM IST

onusood
சோனு சூட்

தெலங்கானா மாநிலம், கச்சிபவுலியில் முன் களப்பணியாளர்கள், பிளாஸ்மா நன்கொடையாளர்களுக்காக சைபராபாத் காவல் துறை சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில், நடிகர் சோனு சூட் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய சோனு சூட், " கரோனா ஊரடங்கின்போது நான் ஏற்ற கதாபாத்திரம்தான் என் வாழ்வில் மிக முக்கியமான கதாபாத்திரம். புலம்பெயர் தொழிலாளர்களுக்காக நாங்கள் அறிவித்த இலவச தொலைப்பேசி எண்ணிற்கு, லட்சக்கணக்கில் அழைப்புகள் வந்தன. ஒரு அழைப்பையும் தவறவிடக் கூடாது என்று நான் என் உதவியாளரிடம் கூறியிருந்தேன்.

கிர்கிஸ்தானைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் உதவிக்காக அழைப்பு விடுத்தனர். அதே போல, பல்வேறு வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மக்களும் தொடர்புகொண்டனர். கிட்டத்தட்ட 7 லட்சத்து 26 ஆயிரத்து 727 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்வதற்கு உதவி செய்யப்பட்டுள்ளது. மேலும், லாக்டவுனில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலையிழக்க நேரிட்டது.

இதில், இரண்டு லட்சம் பேருக்கு வேலை கிடைத்திட உதவி செய்யப்பட்டுள்ளது. இந்த கரோனா தொற்று, பல பாடங்களைச் சொல்லிக் கொடுத்தது மட்டுமின்றி பல மறக்க முடியாத தருணங்களை விட்டுச்சென்றுள்ளது என்றார். கரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்து சோனு சூட் சிறந்து விளங்கினார் என காவல் துறை சார்பில் பாராட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:லஞ்சம் பெற்ற அரசு அலுவலர் பணியிடை நீக்கம் - வைரல் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details