தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவின் நீண்ட நாள் விருந்தாளி நான்- தலாய் லாமா! - இந்தியாவின் நீண்ட நாள் விருந்தாளி

நான் இந்திய நாட்டின் நீண்ட நாள் விருந்தாளி எனத் திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.

Dalai Lama
Dalai Lama

By

Published : Jul 7, 2021, 3:19 PM IST

ஹைதராபாத் : நான் தான் இந்தியாவின் நீண்ட நாள் விருந்தாளி என தலாய் லாலா புதன்கிழமை (ஜூலை 7) தெரிவித்தார்.

டாக்டர் ரெட்டி ஆய்வகங்களின் இணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜி.வி.பிரசாத் உடனான ஒரு காணொலி அமர்வில், திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமா பங்கெடுத்தார்.

அப்போது அவர் உரையாற்றுகையில், “அகிம்சை மற்றும் கருணை ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் நாடு இந்தியா. இது மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

நான் எப்போதும் குறிப்பிடுவது போல, இந்தியா எனது வீடு. நான் திபெத்தில் பிறந்தேன். ஆனால் என் வாழ்க்கையின் பெரும்பகுதி இந்த நாட்டில்தான் கழிந்தது.

நான் இந்திய அரசாங்கத்தின் விருந்தினராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். நான் மிக நீண்ட விருந்தாளி என்று நினைக்கிறேன். இந்தியாவின் மத நல்லிணக்கம் சிறப்புவாய்ந்தது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியர்களின் உள்ளார்ந்த மதிப்புகள் போற்றுதலுக்குரியவை. இந்தியா 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நாடு. இந்த மக்கள் தொகையும் மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இது அரசியால் மட்டுமின்றி, மக்களாலும் சாத்தியப்பட்டது.

மற்ற நாடுகளும் மத நல்லிணக்கத்தின் இந்தியக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். மருத்துவத்திலும் உலக நாடுகள் பங்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாலா செவ்வாயன்று (ஜூலை 6) தனது 86ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சர்வதேச தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : உலக அமைதிக்கு பெண் தலைவர்களின் பங்கு அளப்பரியது -தலாய் லாமா!

ABOUT THE AUTHOR

...view details