ஹைதராபாத் (தெலங்கானா):மஹபூபாபாத் மாவட்டம், பிரிஷெட்டி குடேம் கிராமத்தைச் சேர்ந்த மரகனி முரளி-நாகலட்சுமி தம்பதியினரின் மகள்கள் வீணா மற்றும் வாணி. தலை ஒட்டிப்பிறந்த சகோதரிகள்.
12ஆம் வகுப்பு படித்து வந்த வீணா, வாணி பொதுத்தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், வீணா, வாணி தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
வீணா 712 மதிப்பெண்களும், வாணி 707 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளனர். இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்யாவதி ரத்தோட் வீணா, வாணி இருவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதருவதாக உறுதி அளித்தார்.
ஜூப்லி ஹில்ஸ் எம்எல்ஏ மாகந்தி கோபிநாத் மற்றும் அலுவலர்கள் வீணா, வாணியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முதன்முறையாக விலா எலும்புகள் மூலம் காது குறைபாட்டை சரிசெய்து மருத்துவர்கள் சாதனை!