தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தைச் சேர்ந்தவர் அப்தாப் அஹ்மத் ஷேக் (39). இவர், பழங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். மேலும், இவர் பல திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளார்.
இவர் மீது, 2007 ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத் கமிஷனரேட், நிஜாமாபாத், கரீம்நகர் ஆகிய மாவட்டங்களிலுள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர் பாலியல் வன்புணர்வு வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு, மகாராஷ்டிராவின் கோலாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.