தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குளோரோஃபார்ம் கொடுத்து பெண் பாலியல் வன்புணர்வு... போட்டோ எடுத்து மிரட்டிய அரசு ஊழியர்... - ஹைதராபாத் இளம்பெண் பாலியல் வன்புணர்வு

தெலங்கானாவில் திருமணமான இளம்பெண்ணை அரசு ஊழியர் குளோரோஃபார்ம் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hyderabad Govt staffer knocks down woman with chloroform rapes her
Hyderabad Govt staffer knocks down woman with chloroform rapes her

By

Published : Jul 25, 2022, 4:00 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத்தில் குளோரோஃபார்ம் கொடுத்து திருமணமான இளம்பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஷம்ஷாபாத் போலீசார் தரப்பில், "பாதிக்கப்பட்ட இளம்பெண் திருமணமானவர். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தால் தனியாக வசித்துவருகிறார்.

இதனிடையே, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அரசு ஊழியர் முடாவத் சந்துலால் (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், சந்துலால் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். இதனால் அந்த பெண் அவருடனான நட்பை முறித்துக்கொண்டார். இந்த நிலையில், நேற்று (ஜூலை 24) சந்துலால் குளோரோஃபார்ம் தடவிய கைக்குட்டையுடன் பெண்ணின் வீட்டிற்கு சென்றார்.

அதோடு, கைக்குட்டையை பெண்ணின் மூக்கில் வைத்து மயக்கமடைய செய்து பாலியல் வன்புணர்வு செய்தார். குறிப்பாக பெண்ணை மிரட்டுவதற்காக நிர்வாண அவரது புகைக்படங்களை செல்போனில் பதிவு செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து, அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சந்துலாலை கைது செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:டெல்லி ரயில் நிலையத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details