தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பன்னீர் பர்கருக்கு பதில் சிக்கன் பர்கர் டெலிவரி - சொமேட்டோவுக்கு ஃபைன் - சொமோட்டோ

வாடிக்கையாளருக்கு பன்னீர் பர்கருக்கு பதிலாக சிக்கன் பர்கரை டெலிவரி செய்ததற்காக, சொமேட்டோ நிறுவனத்திற்கு ஆறாயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஹைதராபாத் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

hyderabad
hyderabad

By

Published : Dec 5, 2022, 5:53 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே உள்ள அம்பர்பேட்டையைச் சேர்ந்த தீபக் குமார் சங்வான் என்பவர், சொமேட்டோவில் பன்னீர் பர்கரை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு சிக்கன் பர்கர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தீபக் குமார் சொமேட்டோ நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார்.

500 ரூபாய் நஷ்ட ஈடாக தருவதாக டெலிவரி நிறுவனம் கூறியதாகத் தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தீபக் குமார் ஹைதராபாத் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உணவு டெலிவரி நிறுவனம் தனது மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக தீபக் குமார் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், தீபக்கிற்கு ஐந்தாயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க சொமேட்டோ நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. வழக்கின் செலவுக்காக ஆயிரம் ரூபாயை வழங்கவும் உத்தரவிட்டது.

இதேபோல் விதிகளை மீறி வாடிக்கையாளரிடம் 10 விழுக்காடு சேவை வரி வசூலித்தது தொடர்பான வழக்கில், உணவகம் ஒன்றுக்கு அபராதம் விதித்து ஹைதராபாத் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையும் படிங்க:மூதாட்டியை நிர்வாணமாக்கி தாக்கிய கொடூரம் - 3 பேர் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details