ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் தீப்தி. இவர், உஸ்மானியா பொறியியல் கல்லூரியில் மென்பொருள் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்க நிதி நிறுவனமான ஜெபி மோர்கன் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம்
இருப்பினும், கோடிங் மீதான ஆர்வத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அமெரிக்காவை நோக்கி தனது பயணத்தை திருப்பினார். அங்கு, ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் MS(computer) முதுகலை பட்டத்தை முடித்தார். அப்போது, கேம்பஸ் இன்ட்ரவியூவில் பல முன்னனி நிறுவனங்களில் பணியாற்ற தேர்வானாலும், தனக்கான கனவு வேலைக்காக காத்திருந்தார்.
கனவு கோட்டைக்குள் நுழைந்த ஹைதராபாத் மாணவி
எதிர்பார்த்தபடியே, உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்டில் கால் பதிக்கும் வாய்ப்பு தீப்திக்கு கிடைத்தது. அவருடன் பயிலும் மாணவர்களே ஆச்சரியம் படும் வகையில், ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் சம்பளத்தில் அவர் தேர்வானார்.
300 மாணவர்களில் அதிக ஆண்டு வருமானம் பெற்ற தீப்தி
ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்ட 300 மாணவர்களில் அதிக ஆண்டு வருமானம் பெறுபவர் தீப்தி மட்டும்தான். அவர், மைக்ரோசாஃப்டின் கிரேடு 2 பொறியியலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.