தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கூடுதல் வரதட்சனை தராததால் வன்மம் - மனைவியின் அந்தரங்க படங்களை வெளியிட்ட கணவர் கைது! - கேரளா

கூடுதல் வரதட்சனை தராததால் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட கணவரை போலீசார் கைது செய்தனர்.

Kerala
Kerala

By

Published : May 16, 2023, 8:30 PM IST

திருச்சூர் : கேரளாவில் கூடுதல் வரதட்சனை கொடுக்காத வன்மத்தில், மனைவியின் நிர்வாண புகைப்படங்களை பாலியல் ரீதியிலான செயலியில் வெளியிட்ட கணவரை போலீசார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம் எருமபெட்டி கிராமத்தை சேர்ந்தவர் செபி. 33 வயதான செபிக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பாலக்காட்டை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது மணமகள் வீட்டார் 80 கிராம தங்கம் வரதட்சனையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வரதட்சனை போதவில்லை எனக் கூறி செபி தன் மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டதாக கூறப்படுகிறது. சண்டை நாளடைவில் முற்றி அடிதடியாக மாறியதாக சொல்லப்படுகிறது. கூடுதலாக வரதட்சனை கேட்டு செபி, தன் மனைவியை தொடர்ந்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

பெண் வீட்டார் குடும்ப சூழ்நிலை காரணமாக கூடுதல் வரதட்சனை தரமுடியாத சூழல் நிலவுவதாக தெரிவித்த போதும், அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர்களிடமும் செபி சண்டையிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தனது மனைவியின் நிர்வாண புகைப்படங்களை அவருக்கு தெரியாமல் எடுத்த செபி அதை பாலியல் ரீதியிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் செயலியில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

தற்செயலாக தனது நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை கண்ட பெண் மிரண்டு போய் உள்ளார். தன் கணவரின் கொடூரச் செயல் குறித்து வீட்டில் தெரியப்படுத்திய பெண் பின்னர், காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நிர்வாண காட்சிகளை பகிரும் செயலி குறித்து சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த செயலிகளை பயன்படுத்துபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்றும் கேரள போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க :கர்நாடகா முதலமைச்சர் யார்? காங்கிரஸ் தலைவர் சூசகம்!

ABOUT THE AUTHOR

...view details