போபால்:மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்தவர் தஹேர் கான். அஞ்சும் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட தஹேர், பின்னாட்களில் அவருடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளார். இது தொடர்பாகத் தம்பதியினர் விவாகரத்து மனு தாக்கல் செய்து உள்ளனர்.
இதனிடையே ஹமிதியா என்ற மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட தஹேர், அவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக அஞ்சும் மற்றும் தஹேர் தம்பதி இடையே தொடர் பிரச்சினை இருந்தது வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மகன் மற்றும் உறவினர்களுடன் கணவரின் இரண்டாவது மனைவி வீட்டிற்குச் சென்ற அஞ்சும் அங்கு ரகளையில் ஈடுபட்டுள்ளார். அஞ்சும் மற்றும் தஹேரின் இரண்டாவது மனைவி ஹமிதியா ஆகியோரிடையே வார்த்தை போர் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.