தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கறுப்பாக இருப்பதாகக் கூறி மனைவிக்கு ’முத்தலாக்’ : கணவர் மீது வழக்குப் பதிவு - கிரைம்

கறுப்பாக இருப்பதாகக் கூறி, முத்தலாக் முறையில் மனைவியை விவாகரத்து செய்த கணவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முத்தலாக்
முத்தலாக்

By

Published : Nov 20, 2021, 5:26 PM IST

உத்தரப் பிரதேசம்: பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் கறுப்பாக இருப்பதாகக் கூறி முத்தலாக் முறை மூலம் தன்னை விவாகரத்து செய்த கணவர் மீது கான்ட் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அப்பெண் தனது புகாரில் தனக்கு கடந்த மார்ச் 7ஆம் தேதி ஆலம் என்பவருடன் திருமணம் நடந்ததாகவும், தன் அப்பா 10 ஏக்கர் நிலம் வழங்கியும், தன் கறுப்பு நிறம் காரணமாக தன்னை தன் கணவரும் அவரது வீட்டினரும் மிக மோசமாக நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கார் வாங்குவதற்கு தன் அப்பாவிடமிருந்து 10 லட்ச ரூபாய் கேட்டு அவர்கள் வற்புறுத்தியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தன்னைத் தாக்கியதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை வசைபாடி வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு அரசால் தடை செய்யப்பட்ட ’முத்தலாக்’ முறை மூலம் தன்னை விவாகரத்து செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்பெண்ணின் கணவர் ஆலம் மீது வரதட்சணை தடைச் சட்டம், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Karur Sexual Harassment: 'கடைசி பெண் நானாகத்தான் இருக்க வேண்டும்' - மாணவியின் கண்ணீர் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details