ஜஹாங்கிர்பூரி:வடக்கு டெல்லி, ஜஹாங்கிர்பூர் பகுதியைச் சேர்ந்தவர், சேத்ராம். மனைவியுடன், சேத்ராமுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் வசைபாடிக் கொண்ட நிலையில், வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
திருப்புளியால் கட்டிய மனைவியின் உடலில் பல்வேறு இடங்களில் குத்தி கொடுமைப்படுத்திய சேத்ராம், அந்தரங்க இடங்களில் கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் கோபம் தீராமல் மனைவியின் மூக்கை கடித்து துப்பி உள்ளார். பலத்த காயங்களுடன் துடிதுடித்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,அப்பெண் தற்போது நல்ல உடல் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.