பிகார்: பிகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் பாஸ்மிலராம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முகமது சபீர்(30) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 13-ம் தேதி பணி முடித்து இரவு வீடு திரும்பிய சபீர், இரவு உணவுக்காக ரொட்டி செய்து தரும்படி மனைவியிடம் கேட்டுள்ளார். கணவன் - மனைவி இடையே ஏற்கெனவே பிரச்னை இருந்ததாகத் தெரிகிறது. இதனால் ரொட்டி செய்து தர சபீரின் மனைவி மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சபீர் நள்ளிரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.