டெல்லி:நகை பறிப்பில் ஈடுபட்டதாக மனைவி அளித்த புகாரில் முன்ஜாமீன் வழங்கக் கோரி கணவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி அமீத் மகாஜான் தலைமையிலான அமர்வு, திருமணம், பரிசு உள்ளிட்டவற்றின் மூலம் கிடைத்த தங்க நகைகள் பெண்களின் தனிப்பட்ட சொத்து என்றும் அதை அவர்களின் அனுமதியின்றி வெளியே எடுக்கவும், விற்க மற்றும் அடகு வைக்க கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் உரிமை இல்லை என தெரிவித்தது.
தங்க நகை மட்டுமின்றி வீட்டு உபயோக பொருட்களை மனைவியின் அனுமதியின்றி எடுத்துச் செல்லவும் சட்டத்தில் அனுமதியில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் திருமணமான பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றவும் கணவருக்கு உரிமை இல்லை எனக் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.