மத்திய பிரதேசம் :ஜபல்பூர்பகுதியை சேர்ந்தவர் சனா கான்(34). இவர் கிழக்கு மகாராஷ்டிரா வட்டத்தின் பாரதீய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக இருத்தார். இவருடைய கணவர் அமித் சாகு (37) ஜபல்பூரில் ஹோட்டல் நடத்தி வருகிறார் . சனா கான் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி நாக்பூரில் இருந்து தன் கணவன் சாகுவை காண ஜபல்பூர் சென்றுள்ளார். இதை தொடர்ந்து நாக்பூரில் வசிக்கும் சனாவின் தாயார் மெஹ்ருனிஷா தன் மகளை பற்றி எந்த தகவலும் வராததால் நாக்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் காணாமல் போனதாக வந்த தகவலை வைத்து நாக்பூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சனா கான் நாக்பூருக்கு தனியார் பேருந்து மூலமாக பயணித்தாகவும் பின்னர் ஜபல்பூருக்கு வந்தவுடன் தனது அம்மாவை போன் மூலம் தொடர்புகொண்ட பின்னர் காணாமல் போனதும் தெரிய வந்துள்ளது.
பின்னர், சனாவின் செல்போனின் கடைசி இருப்பிடத்தை வைத்து விசாரணை நடத்திய போலீசார், அவர் இறுதியாக ஜபல்பூர் வீட்டில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து நாக்பூர் காவல் துறையினர் கடந்த ஆகஸட் 4ஆம் தேதி ஜபல்பூர் விரைந்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க:தேனியில் கடன் தொல்லையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர் கைது!
ஜபல்பூரில் இருக்கும் அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், நேற்று (ஆகஸ்ட் 11) சனாவின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சனாவை தான் தான் கொன்றதாகவும் பின்னர் உடலை நதியில் வீசி விட்டதாகவும் போலீசாரிடம் அமித் சாகு கூறியதாக தெரிவிக்கப்படு உள்ளது. பின் அமித்தை ஜபல்பூரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், விசாரணையில் சனா மற்றும் அமித் இடையே பணம் மற்றும் பல பிரச்சனைகளால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கோபமடைந்த அமித் அருகில் இருந்த குச்சியை எடுத்து சனாவை சராமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் சனா அடி தாங்க முடியாமல் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.
சனா உயிரிழந்த பின் செய்வது அறியாது இருந்த அமித், பெல்கெடா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேரேகான் கிராமத்தில் உள்ள ஹிரான் நதியில் அவரது உடலை வீசி விட்டதாக காவல் துறை விசாரணையில் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தின் போது அமித்துடன் இருந்த இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
மனைவியும் பாஜக நிர்வாகியுமான சனா கானை, கணவரே குச்சியால் அடித்து கொன்று, நதியில் உடலை வீசிய சம்பவம் அப்பகுதியி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு உடல்நலக்குறைவு :பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி !