அகர்மால்வா: இண்டோர் பகுதியில் 83 காக்கைகள் செத்து விழுந்த மறுநாள் அகர்மால்வா பகுதியில் 120 காக்கைகள் இறந்துள்ளன.
மபி பறவைக் காய்ச்சல் - கொத்துக் கொத்தாக செத்து விழும் காக்கைகள்! - காக்கா
மத்திய பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் இடையே நூற்றுக்கும் மேற்பட்ட காக்கைகள் செத்து விழுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அகர்மால்வா பகுதியில் செத்து விழுந்த காக்கைகள், ஜாவனியில் உள்ள சாக்கடையில் வீசப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் ஏவியன் எனும் பறவைக் காய்ச்சல் பரவுவதாக வனத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பறவைகள் எதுவும் இறந்துள்ளனவா என தேடும்போது அகர்மால்வா பகுதியில் காக்கைகள் இறந்திருப்பது தெரியவந்தது. இதுவரை 125 காக்கைகள் சாக்கடைகளில் வீசப்பட்டுள்ளன.
இறந்த காக்கைகள் உடற்கூராய்வுக்காக போபாலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. காக்கைகள் இறந்து விழுந்த இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவு தூரத்துக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, சுகாதாரத் துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான், நாக்பூர் ஆகிய இடங்களிலும் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது.