ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அந்தர்வேதி கடலில் ஹம்ப்பேக் திமிங்கலங்கள் தென்பட்டுள்ளன. கடல் அலைகள் குறைவாக இருக்கும் காலை வேளைகளில் அந்தர்வேதி கடற்கரையிலிருந்து 500 மீ தொலைவில் இவை காணப்படுகின்றன.
இரை தேடிவிட்டு, கடலில் நீந்திக் கொண்டிருந்த ஹம்ப்பேக் திமிங்கலங்களை வன விலங்கு புகைப்படக் கலைஞர் மன்னேபுரி ஸ்ரீகாந்த் புகைப்படம் எடுத்துள்ளார்.