போபால்:மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பந்து மதுரியா-மம்தா தம்பதிக்குத் திருமணமாகி 18 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. அதன் காரணமாக, பல கோயில்களுக்குச் சென்று வேண்டுவது, மருத்துவர்களை ஆலோசிப்பது என பல முயற்சிகள் எடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், இவர்களது உறவினரான நீரஜ் என்பவர் இந்த தம்பதியை சாமியார் ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அந்த வேளையில் சாமியார், குழந்தை பாக்கியம் கிடைக்க இளம்பெண்களை நரபலி கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதைத்தொர்ந்து, குவாலியரில் ஒரோ வாரத்தில் இரண்டு இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.