தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிபொருட்கள் பறிமுதல்! - சென்னை எக்ஸ்பிரஸ் செய்திகள்

திருவனந்தபுரம்: சென்னையில் இருந்து கேரளா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு வந்த சென்னை எக்ஸ்பிரஸிலிருந்து ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Huge cache of explosives seized from Chennai express in KozhikodeHuge cache of explosives seized from Chennai express in Kozhikode
Huge cache of explosives seized from Chennai express in Kozhikode

By

Published : Feb 26, 2021, 11:54 AM IST

கேரளா செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிபொருள்கள் கடத்தப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோழிக்கோடு சென்றடைந்த ரயிலில், ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது ரயிலின் இருக்கைக்கு அடியில் 117 ஜெலட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், திருவண்ணாமலை பூர்வீக ரமணி என்பவரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details