உலகின் மிக நீளமான நடைமேடை கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்தில் அமையவுள்ளது. சுமார் 1,500 மீட்டர் நீளம் 10 மீட்டர் அகல பரப்பளவில் அமையவுள்ளதாக தென் மேற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைமேடை ஒன்றில் நடைபெற்றுவருவதாக ரயில்வே அலுவலர்கள் கூறுகின்றனர்.
ஹூப்ளி ரயில் நிலையத்தில் உலகின் மிக நீளமான நடைமேடை - உலகின் மிக நீளமான ரயில் நடைமேடை
பெங்களூரு: உலகின் மிக நீளமான நடைமேடை கர்நாடகாவின் ஹூப்ளி ரயில் நிலையத்தில் அமையவுள்ளது.
![ஹூப்ளி ரயில் நிலையத்தில் உலகின் மிக நீளமான நடைமேடை ஹூப்ளி ரயில் நிலையம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10006382-556-10006382-1608904806866.jpg)
தற்போது, 550 மீட்டர் நீளம் கொண்ட அந்த நடைமேடை 1,400 மீட்டருக்கு நீட்டிக்கப்படவுள்ளது. இப்பணிகள் அடுத்த ஓராண்டுகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, போதுமான வசதிகள் இல்லை எனவும் ரயில் நேரங்களை முறையாக பராமரிப்பதில்லை எனவும் பணிகள் புகார் தெரிவித்துள்ளனர். நடைமேடையின் நீளம் குறைவாக இருப்பதால், நெடுந்தொலைவு செல்லும் ரயில்கள் முக்கிய நடைமேடையின் வெளியே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
பயணிகளின் குறைகளை போக்கும் விதமாக, ரயில் நடைமேடை அமைக்கும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது.