தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

100 நாடுகளில் வெளியாகிறது பாலிவுட் 'விக்ரம் வேதா'

ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகவுள்ள விக்ரம் வேதா திரைப்படம் பாலிவுட்டிலேயே முதல் முறையாக உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகவுள்ளது.

100 நாடுகளில் வெளியாகிறது பாலிவுட் 'விக்ரம் வேதா'
100 நாடுகளில் வெளியாகிறது பாலிவுட் 'விக்ரம் வேதா'

By

Published : Sep 15, 2022, 2:34 PM IST

மும்பை: நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம் பாலிவுட்டிலேயே முதல் முறையாக உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகவுள்ளது.

இந்தியாவைத் தவிர, வட அமெரிக்கா, இங்கிலாந்த்(UK) மத்திய கிழக்கு மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பாலிவுட் படங்கள் வழக்கமாக வெளியாகும் பகுதிகளில் செப்டம்பர் 30 அன்று படம் வெளியாகிறது.

இதுமட்டுமின்றி 'விக்ரம் வேதா' ஐரோப்பாவில் 22 நாடுகளிலும், ஜப்பான், ரஷ்யா, பனாமா, பெரு, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட 27 நாடுகளிலும், இப்படம் வெளியிடப்படுகிறது.

இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற 'விக்ரம் வேதா' படத்தின் ரீமேக் ஆகும், இது எழுத்தாளர்-இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ளனர். புஷ்கர் மற்றும் காயத்ரி இந்தி மொழி ரீமேக்கையும் இயக்கியுள்ளனர்.

இந்திய நாட்டுப்புறக் கதையான "விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள்" அடிப்படையிலான நியோ-நோயர் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் ஆகும். இப்படத்தை டி-சீரிஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து ஃப்ரைடே பிலிம்வொர்க்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும்ஒய் நாட் ஸ்டுடியோஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளது. ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட், ஹோம் ஸ்க்ரீன் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து படத்தின் சர்வதேச விநியோகத்திற்காக ஒத்துழைத்துள்ளது.

இதையும் படிங்க:மீண்டும் திரைப்படம் இயக்க வாய்ப்பு... சிம்பு!

ABOUT THE AUTHOR

...view details