ஹைதராபாத்: பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் குடும்பத்துடன் தனது மூத்த மகனின் பிறந்தநாளை இன்று (மார்ச் 28) கொண்டாடினார்.
மனைவியுடன் மூத்த மகனின் 15ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ஹிர்திக் ரோஷன்!
நடிகர் ஹிர்திக் ரோஷன் தனது மூத்த மகனின் 15ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
நடிகர் ஹிருத்திக்ரோஷன் தனது முன்னாள் மனைவி சூசைன் உடன் நட்புறவில் உள்ளார். திருமண உறவிலிருந்து பிரிந்த பின்னரும் இவர்களுக்குள் நல்லுறவு தொடர்கிறது. இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் ரேஹனுக்கு இன்று 15ஆவது பிறந்தநாள். இந்தப் பண்டிகையை ஹிருத்திக்ரோஷன் குடும்பத்துடன் கொண்டாடினார்.
இந்தப் புகைப்படங்களை ஹிருத்திக் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ஹிருத்திக்-சூசைன் தம்பதியருக்கு மூத்த மகன் 2006லிலும், இரண்டாவது மகன் ஹரிதன் 2008லிலும் பிறந்தனர். இந்தத் தம்பதியர் 2013இல் பிரிந்தனர். இந்நிலையில், 2014ஆம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்து வாழ்கின்றனர்.