தமிழ்நாடு

tamil nadu

கொல்கத்தாவின் அடையாளத்தில் குட்கா கறை... அரசின் 6 அடி நடவடிக்கை...

By

Published : Apr 27, 2022, 4:10 PM IST

மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய அடையாளமான ஹவுரா பாலத்தில் குட்கா துப்பப்படுவதை தடுக்க 6 அடிக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

howrah-bridge-pillars-get-protective-coating-against-gutka-sputum
howrah-bridge-pillars-get-protective-coating-against-gutka-sputum

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய அடையாளமான ஹவுரா பாலம் ஹூக்ளி நதிக்கு மேல் கொல்கத்தா-ஹவுரா நகரங்களை இணைக்கிறது. இந்த பாலத்தின் வழியாக நாளொன்றுக்கு 1.2 லட்சம் வாகனங்கள், 5 லட்சம் பாதசாரிகள் செல்கின்றனர். அப்போது பாதசாரிகள் பான் மாசாலா, குட்காவை பாலத்தின் தூண்களில் துப்பிச்செல்கின்றனர்.

இதனால் பாலத்தின் மதிப்பும், தரமும் குறைவதாக பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அந்த வகையில், அறிவிப்பு பலகை, எச்சரிக்கை பலகை உள்ளிட்டவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் துப்புவதை பாதசாரிகள் நிறுத்தியபாட்டில்லை.

இதனால், அரசு புதிய முயற்சியை ஒன்றை கையிலெடுத்துள்ளது. அதாவது பாலத்தின் தூண்களை சுற்றி 6 அடிக்கு தடுப்புகளை அமைத்துள்ளது. இந்த பாலத்திற்கு 2021ஆம் ஆண்டு பூச்சு வேலை நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிகார் இரும்பு பாலம் திருட்டு: அரசு அலுவலர் உள்பட 7 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details