தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு - ஒடிசாவில் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ்

ஒடிசாவில் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

Howrah-Bhubaneswar Jan Shatabdi Express derails in Odisha
Howrah-Bhubaneswar Jan Shatabdi Express derails in Odisha

By

Published : Sep 18, 2022, 2:57 PM IST

புவனேஷ்வர்:மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நோக்கி புறப்பட்ட ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ், இன்று (செப் 18) ஒடிசாவின் பத்ரக் அருகே உள்ள லெவல் கிராசிங்கில் தடம் புரண்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள், பத்ரக் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது காளை குறுக்கே வந்துள்ளது.

இதனால் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் என்ஜினுக்கு அருகில் உள்ள பெட்டியின் சக்கரங்கள் தடம் புரண்டன. இந்த விபத்தால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக மறுசீரமைப்பு பணிகளுக்காக அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரத்தில் பெட்டியின் சக்கரங்கள் மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டன. அந்த வழிதடம் இரட்டை வழித்தடமாக இருந்ததால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. 1 மணி நேரத்திற்கு பின் ரயில் மீண்டும் கிளம்பியது எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:"தேசிய தளவாடக் கொள்கை நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும்"

ABOUT THE AUTHOR

...view details