ஐதராபாத்:ஒருவர் வீட்டு வாடகை மூலம் ஈட்டும் வருவாய்க்கு வரி விதிக்கப்படும் என இந்திய வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வீட்டு வாடகை மூலம் வரும் வருவாய் வருடாந்திர வரிக் கணக்கில் காட்டப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டு பயனாளிக்கு வரிச்சு மையைக் குறைக்கச் சட்டம் அனுமதிக்கிறது.
நீண்ட காலத்திற்கு வாடகை மூலம் கிடைக்கும் வருமானம் தனிநபர் வருமான வரி அடுக்குகளை மாற்றுக் கூடியது. இந்நிலையில் வாடகை மூலம் வருவாய் ஈட்டும் உரிமையாளர்கள் வரிச்சுமையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
ஏதேனும் அசையாத சொத்தின் வாடகை அல்லது குத்தகையின் மூலம் பெறப்படும் வருவாயை வீட்டு சொத்திலிருந்து கிடைக்கும் வருமானம் என்ற அடிப்படையின் வருமான வரி அடுக்குகளின் கீழ் காட்ட வேண்டும். இதன் மூலம் உச்சபட்ச வருவாய் குறைக்கப்பட்டு வருமான வரியிலிருந்து விலக்கு பெற முடியும்.
மேலும் தனிநபர்கள் தங்கள் மொத்த வருமானத்தில் வீட்டு வாடகை வருமானத்தையும் சேர்த்து, வருமான வரியில் பொருந்தக் கூடிய வகையிலான அடுக்குகளின் கீழ் வரி செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு, தொழில் அல்லது வேறு எதிலிருந்தும் வருமானம் பெறாத ஒருவர் பெறும் வாடகைத் தொகை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்றால் அப்போது அவர் எந்த வரியும் செலுத்த தேவையில்லை.
அடுத்த ஆண்டு வாடகை 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எடுத்துக் கொண்டால், வருமான வரி அடுக்குகளில் உள்ள 80C மற்றும் பிற பிரிவுகளின் கீழ் அவர் விதி விலக்குகளைப் பெற முடியும். அதேநேரம் வீட்டு உரிமையாளர், வாடகை வருமானத்திலிருந்து சில நிலையான விலக்குகளைப் பெறச் சட்டத்தில் அனுமதி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வாடகையிலிருந்து 30 சதவீதம் வரை சொத்து வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த விலக்குகள் அளிக்கப்படுகின்றன.