ஹைதராபாத்: தெலங்கானாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இன்று (ஜூலை 27) - பத்ராத்ரி, கம்மம், ஜனகாமம், சூர்யாபேட், வாரங்கல், ஹனுமகொண்டா, மகபூபாபாத், பூபாலபள்ளி, முலுகு, பெத்தபள்ளி, கரீம் நகர், மஞ்சிரியாலா, குமுரம் பீம், அடிலாபாத், ஜகித்யாலா, சித்திபேட், மேடக், காமரெட்டி, சங்கரெட்டி, நல்கொண்டா ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து நாளை (ஜூலை 28) - யாதாத்ரி புவனகிரி, மகபூபாபாத், வாரங்கல், ஹனுமகொண்டா, கரீம்நகர், சித்திப்பேட்டை, மேடக், மேட்சல், அடிலாபாத், குமுரம் பீம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், நாளை மறுநாள் (ஜூலை 29) பெத்தபள்ளி, பூபாலபள்ளி, முலுகு, நிஜாமாபாத், நிர்மல், ஜகித்யாலா, அடிலாபாத் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், ஹைதராபாத்தில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:எதிர்கட்சிகளின் அமளியால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு!