ஐதராபாத்:சுற்றுலாக்களை இன்புறச் செய்வது நாம் பயணிக்கும் வாகனங்களைப் பொறுத்தே அமைகிறது. அதிலும் குழு சுற்றுலாக்களில் நாம் செல்லும் வாகனங்களே, நாம் சுற்றுலாவை எந்த அளவு உற்சாகத்துடன் கொண்டாடப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் இந்திய ரயில்வே, குழு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
குழு சுற்றுலாக்கள் செல்பவர்களுக்கு ஏதுவாக ஒரு பெட்டி முதல் 18 பெட்டிகள் வரை இந்திய ரயில்வே வாடகைக்கு வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி ஐஆர்சிடிசி மூலம் முழு ரயில் அல்லது தனிப்பட்ட வகையில் பெட்டியை முன்பதிவு செய்ய விரும்புபவர்களுக்கு இந்திய ரயில்வே பல்வேறு சலுகைகள் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கட்டணம், முன்பதிவு வழிகாட்டு நெறிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் உள்பட ஐஆர்சிடிசியில் முழு ரயில் அல்லது ஒரு பெட்டியை முன்பதிவு செய்யத் தேவையான தரவுகளைப் பெற ஐஆர்சிடிசி முழு கட்டண சேவை என அழைக்கப்படும் IRCTC FTR என்ற இணையதளத்தில் காணலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த IRCTC FTR இணையதளத்தில் வணிக பயன்பாட்டுக்கான ரயில் அல்லது ஒரு பெட்டியை மட்டும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து ரயில் நிலையங்களில் இருந்தும் இந்த ரயிலுக்கான பயணத்தைச் சுற்றுலாப் பயணிகள் எளிதில் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், தனிப்பட்ட ரயில் பெட்டிகளை வாடகைக்கு எடுக்கும் போது, 10 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ரயில் நிறுத்தப்படும் நிலையங்களில் மட்டுமே சுற்றுலா ரயில் பெட்டியை மற்ற இணைப்பு ரயில்களுடன் இணைக்கவோ அல்லது பிரிக்கவோ முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.