டெல்லி:மத்திய நிதி அமைச்சகம், மாநில அரசுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்வு தவணை தொகை ரூ.72,961.21 கோடியை விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.2,976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ரூ.2976.10 கோடி வரி பகிர்வு - மத்திய அரசு!
Additional installment of Tax Devolution to States: மத்திய நிதி அமைச்சகம், மாநில அரசுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்வு தவணை தொகை ரூ.72,961.21 கோடியை விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.2,976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published : Dec 22, 2023, 7:14 PM IST
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரவிருக்கும் 2024 புத்தாண்டு பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு, பொது மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் மாநிலத்தின் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும், மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தவும், மாநில அரசை வலுப்படுத்த ரூ.72,961.21 கோடி வரி பகிர்வு தவணை தொகைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:வணிக சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு.. எவ்வளவு தெரியுமா?