தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Madras IIT in Tanzania: சர்வதேச அளவில் கல்வியிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா இந்தியா? - ஜெய்சங்கர்

தான்சானியாவில் தொடங்கப்பட உள்ள சென்னை ஐஐடி வளாகம், சர்வதேச அளவில் கல்வியிலும் இந்தியாவின் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 7, 2023, 3:02 PM IST

ஹைதராபாத்: தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் - சான்சிபார் அதிபர் ஹூசைன் அலி முவினி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி, விரைவில் தான்சானியா நாட்டில் சென்னை ஐஐடி வளாகம் தொடங்கப்பட உள்ளது.

அப்போது, இந்த வளாகம் அமைப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் கல்வி தொடர்பான உறவுகளை வலுப்படுத்தும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த வளாகமானது 50 இளங்கலை இடங்கள் மற்றும் 20 முதுகலை இடங்கள் உடன் வருகிற அக்டோபர் மாதம் முதல் திறக்கப்பட உள்ளதாகவும் அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியா கல்வி முறையில் முதன் முறையாக நாட்டின் வெளியே ஒரு வளாகத்தை நிறுவி உள்ளது. இதன் மூலம், இந்தியா தனது கல்வியின் தாக்கத்தை மற்ற நாடுகளில் எவ்வாறு வெளிப்படுத்த இருக்கிறது என முன்னாள் கென்யா, லெசோத்தோ மற்றும் தென்னாப்பிரிக்காவின் இந்திய தூதரும், வெளிநாட்டு உறவுகளுக்கான கேட்வே ஹவுஸ் இந்திய கவுன்சிலின் தொடர்பாளருமான ராஜீவ் பாட்டியா ஈடிவி பாரத் செய்திகளுக்கு சிறப்பு பேட்டி அளித்து உள்ளார்.

இது தொடர்பாக பேசிய ராஜீவ் பாட்டியா, "இந்த வளாகம் தான்சானியாவில் உள்ள மாணவர்களுக்காக மட்டும் திறக்கப்படுவதில்லை. இது அண்டை நாடுகளான கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் வெளிநாட்டில் பயில வேண்டும் என விருப்பப்படும் இந்திய மாணவர்களுக்காகவும் திறக்கப்பட உள்ளது.

இந்த வளாகத்தின் மூலம் உயர் கல்வி, தொழில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவையும் ஊக்குவிக்கப்படும். வழக்கமாக இந்தியாவின் கலை, கலாச்சாரம், யோகா, ஆன்மீகம், திருவிழாக்கள், இசை, நடனம் மற்றும் சமையல் வகைகள் ஆகியவையே இந்தியாவின் மென்மையான ஆற்றலாக கருதப்படுகிறது. இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால், கல்வி முக்கிய தூணாக தற்போது அமைய உள்ளது.

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டம் (ITEC) என்பது வெளியுறவு அமைச்சகத்தின் முன்னணி திறன் மேம்பாட்டு தளம் ஆகும். 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டம் என்பது, 160 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமான அதிகாரிகளை பாதுகாப்பு பிரிவில் பயிற்சி அளிப்பதற்காக சர்வதேச அளவிலான இருக்கைகளை அமைத்துக் கொடுத்த பழமையான அமைப்புகளில் ஒன்றாகும்.

புதிய கல்விக் கொள்கையின்படி, கலாச்சார தொடர்புகளுக்காக இந்திய கவுன்சில் மூலம் இந்தியாவுக்கு உயர்கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வழி செய்யப்பட்டு உள்ளது. எனவே, இந்த புதிய கல்விக் கொள்கை 2020 என்பது, வெளிநாடுகளில் இந்திய கல்வி நிறுவனங்களின் வளாகங்களை உருவாக்க உந்துதலாக அமைந்து உள்ளது.

நமது அரசு (இந்திய அரசு) வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் வளாகங்களை இந்தியாவில் அமைப்பதற்கு எப்போதும் உந்துதலாகவே இருக்கிறது. தான்சானியா என்பது கிழக்கு ஆப்பிரிக்க சமூகத்தின் (EAC) தலைமையகமாக செயல்படுவதால், அது ஒரு மண்டல மையமாக பார்க்கப்பட வேண்டும்.

கிழக்கு ஆப்பிரிக்க சமூகம் என்பது காங்கோ ஜனநாயக குடியரசு, தான்சானியா, கென்யா, புருண்டி, வாண்டா, தெற்கு சூடான் மற்றும் உகாண்டா ஆகிய 7 மாகாணங்களை உள்ளடக்கிய அமைப்பு ஆகும். மண்டலத்தின் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் இலக்கில் இந்த சென்னை ஐஐடி கல்வி வளாகம் அமைக்கப்பட உள்ளது.

கல்வி நிகழ்வுகள், பாடத்திட்டங்கள், மாணவர் சேர்க்கை அம்சங்கள் மற்றும் கற்பித்தல் விவரங்கள் ஆகியவை சென்னை ஐஐடியால் வகுக்கப்படும். அதேநேரம், மூலதனம் மற்றும் இயக்கச் செலவுகள் ஆகியவை சான்சிபார் - தான்சானியா அரசால் நிறைவேற்றப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:IIT Madras campus: தான்சானியாவில் சென்னை ஐஐடி கிளை - கையெழுத்தானது ஒப்பந்தம்!

ABOUT THE AUTHOR

...view details