தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட வீடு...! 120 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலும் அசைக்க முடியாது...! - மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்

மங்களூரு: மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு கர்நாடகா மாநிலம் மங்களூருவில் வீடு உருவாக்கப்பட்டுள்ளது. கல், சிமெண்ட் மூலம் அடித்தளம் அமைத்து பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு மேல்தளம் கட்டப்பட்டுள்ளது.

House-made of plastic waste
House-made of plastic waste

By

Published : Nov 11, 2020, 4:30 PM IST

இன்றைய நவீன காலக்கட்டத்தில் பிளாஸ்டிக் இல்லா நகரத்தை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், 2019ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநில அரசுகளும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்தன.

இதனிடையே கர்நாடகா மாநிலம் மங்களூருவில் "பிளாஸ்டிக் மாற்றத்துக்கான இந்தியா அறக்கட்டளை" சார்பாக, மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அதை சேகரிப்பவர்களுக்கு வீடு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பான் பராக், சிப்ஸ், குறைந்த அடர்த்தி கொண்ட பிளாஸ்டிக், மல்டி லேயர் கொண்ட பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி அழகிய வீடு உருவாக்கப்பட்டுள்ளது. 1500 கிலோ பிளாஸ்டிக் கொண்டு கட்டப்பட்ட இந்த வீட்டின் பரப்பளவு 360 சதுர அடியாகும். சிறிய சமையலறை, பூஜை அறை, குளியலறை, ஹால் உள்ளிட்டவைகளுடன் வடிவமைக்கப்பட்ட வீட்டின் செலவு ரூ. 4.50 லட்சம் ஆகும்.

கல், சிமெண்டால் அடித்தளம் அமைத்து, இரும்பு தண்டுகள் மூலம் வெல்டிங் செய்யப்பட்டு பிளாஸ்டிக் பேனல்களை வலுவாக மாற்றப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு மேல்தளம் அமைக்கப்பட்டுள்ள வீட்டை முழுவதுமாக கட்டி முடிக்க வெறும் பத்து நாட்களே ஆனது. தீ விபத்து, 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் அதை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும், "பிளாஸ்டிக் மாற்றத்துக்கான இந்தியா அறக்கட்டளை" சார்பாக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பாளர்களுக்காக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 வீடுகள் கட்டிக் கொடுக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பிளாஸ்டிக் மாற்றத்துக்கான இந்தியா அறக்கட்டளையின் இயக்குநர் எம்.சி. சந்தன் கூறுகையில், "மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மீண்டும் பயன்படுத்த குஜராத் மாநிலத்துக்கு அனுப்பப்படுகின்றன. அதை கொண்டு அங்கு தளம் அமைக்கப்படுகிறது. பின்னர். அந்த பேனல்களை இங்கு எடுத்து வந்து வீடு கட்டப்படுகிறது. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் இருந்து பேனல் தயாரிக்கப்பட்டாலும் கூட, ரசாயனம் போல் இருப்பதில்லை. இந்த வீடு கல், சிமெண்டால் கட்டப்பட்டது போல் வலுவானது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details