அஸ்ஸாம் மாநிலம், நாகான் மாவட்டத்தில் உள்ள மரிக்லாங் காவல் நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் புகுந்து காவல் வாகனத்தையும் காவலர்களையும் தாக்கியுள்ளனர். இருசக்கர வாகனத்ம் ஒன்றை காவலர்கள் பறிமுதல் செய்ததே இந்தக் கலவரத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தால் துவம்சமான காவல் நிலையம்! - இருசக்கர வாகனத்தால் கலவரம்
திஸ்பூர் : இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தற்காக நூற்றுக்கணக்கான பேர் காவல்நிலையத்தில் புகுந்து கலவரம் செய்ததை அடுத்து அங்கு சச்சரவு வெடித்தது.

கும்பலாக தாக்குதல்
காவல் நிலையத்தைத் தாக்கிய கும்பல்
முன்னதாக, காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது சிக்கிய ஸ்கூட்டி (AS-02R-5535) இருசக்கர வாகனத்தில் எந்த ஆவணங்களும் இல்லாத காரணத்தால் காவல் துறையினர் அதனைப் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த சாடெக் அகமது என்ற இளைஞர் தலைமையிலான கும்பல், நேற்று (நவ.06) இரவு காவல் நிலையத்தை துவம்சம் செய்துள்ளது.
இதையும் படிங்க: தந்தத்திற்காக சுட்டுக் கொல்லப்பட்ட குட்டி யானை!