தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இந்தி (அ) ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும், இல்லையேல் கடும் நடவடிக்கை!' - சசி தரூர்

டெல்லி: கேரள செவிலியர் பணியின்போது அலுவலக மொழியாக மலையாளத்தில் பேசக்கூடாது எனவும், இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்றும் டெல்லி ஜி.பி. பண்ட் மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இல்லையேல் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

கேரள செவிலியர்

By

Published : Jun 6, 2021, 10:17 AM IST

Updated : Jun 6, 2021, 10:57 AM IST

ஜி.பி. பண்ட் மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "மருத்துமனையில் அலுவல் மொழியாக மலையாளம் பயன்படுத்தப்படுவது குறித்து புகார் வந்துள்ளது. அதேசமயம் அதிகபட்ச நோயாளிகளுக்கும், உடன் பணியாற்றுவோருக்கும் இந்த மொழி தெரியாது.

எனவே அனைத்து செவிலியர் பணியாளர்களும் இந்தி, ஆங்கிலத்தை மட்டுமே அலுவல் மொழியாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது, இல்லையெனில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jun 6, 2021, 10:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details