தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரு குதிரை இவ்வளவு விலையா? - இந்த பணத்தில் 2 கார் வாங்கலாமே..! - marwari horse

உத்தரகாண்டில் புகழ்பெற்ற காசிபூர் சைதி மேளா ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி களைகட்டியுள்ளது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பல்வேறு வகையான குதிரைகள் விற்பனை கொண்டு வரப்பட்டுள்ளது.

குதிரை விற்பனைக்கு வருகை
குதிரை விற்பனைக்கு வருகை

By

Published : Apr 9, 2022, 6:44 PM IST

Updated : Apr 9, 2022, 6:52 PM IST

காசிபூர் (உத்தரகாண்ட்):உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற காசிபூர் சைதி மேளா ஏப்ரல் 2ஆம் தேதி உற்சாகமாகத் தொடங்கியது. கரோனா தொற்று பரவலுக்குப் பின் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குதிரை சந்தை தொடங்கி ஒரு மாதம் காலம் நடைபெறவுள்ளது. இந்த சந்தையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இந்த குதிரை சந்தைக்கு அண்டை மாநிலங்களிலிருந்து பல்வேறு வகையான குதிரைகள் விற்பனை கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் விலையுயர்ந்த குதிரையாக மார்வாரி வகையைச் சேர்ந்த 'புரா நுக்ரா' என்ற பெயர் கொண்ட குதிரை உத்தரபிரதேசத்திலிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.21 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புரா நுக்ரா உரிமையாளர் இபிள் ஹாசன் கூறுகையில், "நான் உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். புரா நுக்ராவுக்கு 17 மாதங்கள் ஆகிறது. 2014ஆம் ஆண்டு முதல் நான் இந்த குதிரை சந்தைக்கு வருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தை நடைபெறுவதால், இந்தாண்டு ஏராளமான குதிரை வியாபாரிகள் வருகை தந்துள்ளனர்" என்றார்.

காசிபூர் சைதி மேளா

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து குதிரை வியாபாரிகள் தங்கள் குதிரைகளுடன் பங்கேற்றுள்ளனர். குதிரை வாங்குவதற்கு முன் அதன் திறன், தோற்றத்தை பார்த்து வாங்கிச் செல்கின்றனர். இம்முறை சிந்தி, அரேபியா, மார்வாரி, அவலாக், அமிர்தசாரி, வல்ஹோத்ரா, நுக்ரா, ஆப்கானி வகை குதிரைகள் சந்தைக்கு வந்துள்ளன. இருப்பினும், லூதியானா மற்றும் பஞ்சாபில் இருந்து வரும் குதிரைகளுக்கு தேவை அதிகமாகவே உள்ளன.

இது குறித்து குதிரை சந்தை நடத்துபவர் சவுத்ரி சவுகத் கூறுகையில், "குதிரை சந்தை எங்கள் முன்னோர்களால் தொடங்கப்பட்டது. 140 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வந்து குதிரை வாங்கிச் செல்வர்" என்றார்.

இதையும் படிங்க: 500 கிலோ இரும்பு பாலத்தை திருடிய திருடர்கள்!

Last Updated : Apr 9, 2022, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details