தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: மே 23 - இன்றைய ராசிபலன் - raasipalan

TODAY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்போம்.

TODAY HOROSCOPE: மே 23 - இன்றைய ராசிபலன்
TODAY HOROSCOPE: மே 23 - இன்றைய ராசிபலன்

By

Published : May 23, 2022, 6:49 AM IST

மேஷம் :உடனடியாக துரித முடிவுகளை அந்த இடத்திலேயே எடுக்கும் திறன்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இருப்பினும், நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் முடிவெடுக்கும்போது, பிறரின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. அதிலும், நிதி தொடர்பான விஷயமாக இருந்தால் முடிவெடுப்பதற்கு முன் உரியவர்களிடம் ஆலோசனையை பெறுவதைப் பரிந்துரைக்கிறோம்.

ரிஷபம் :எளிதான, கவலையற்ற நாள் உங்கள் முன் இருக்கிறது. எந்தவொரு வருத்தமோ அல்லது கவலையோ இன்றைக்கு ஏற்படாது. எனினும், சக்திக்கு மீறி ஒரு நேரத்தில் பல விஷயங்களை நீங்கள் கையாள வேண்டியிருந்தாலும் பாராட்டை பெறாமல் போவதற்கும், மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. நடைமுறைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள். சில விஷயங்களை மிகைப்படுத்த வேண்டாம். எதார்த்தமாகவும், நியாயமாகவும் இருக்க முயற்சிக்கவும்.

மிதுனம் :தினசரி வேலைகளில் இருந்து ஒரு இடைவெளி எடுத்து கொள்ளலாம். புத்துணர்வு பெற இன்ப சுற்றுலா மேற்கொள்ளலாம். எதிர்பாலினத்தவரிடமிருந்து உங்களுக்கு இயல்பாகவே ஆதரவு கிடைக்கும். யாரையாவது காதலித்தால், அது தொடர்பான நடவடிக்கையை இன்று எடுப்பீர்கள். மாலை நேரத்தில் தியானம் செய்வது அல்லது உங்களை உற்சாகப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவீர்கள்.

கடகம் :சிறந்த மற்றும் விதிவிலக்கான ஒரு நாள் உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது. பேச்சுவார்த்தைகளை நடத்தும் போது வியாபார அறிவும், நுணுக்கமும் உதவியாக இருக்கும். உங்கள் தலைமைப் பண்பின் திறன்கள் இறுதிக் கட்டத்திற்கு முன்னதாகவே வெளிப்படக்கூடும், அது ஒரு கட்டளையை நிறைவு செய்வதாகவோ அல்லது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதாகவோ அல்லது அவற்றை விற்பனை செய்வதாகவோ இருக்கலாம்.

சிம்மம் :அனைத்து சவால்களையும் தடைகளையும் நீங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம். எந்தவித சூழ்நிலையிலும் குறிப்பிட்ட இலக்கில் வெற்றி பெற வேண்டும் என்பதே உங்கள் இறுதி லட்சியமாக இருக்கும். வியாபாரத்திலோ, தொழிலிலோ கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சொந்த வாழ்க்கை இடையூறு ஏதுமின்றி சுமூகமாக தொடரும்.

கன்னி :பேச்சாற்றலும், ஆக்கப்பூர்வமான சிந்தனையும் உங்களுடைய சிறந்த ஆயுதங்கள். நீங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்பவர் என்றாலும், அழுத்தமோ அல்லது கஷ்டமோ இல்லாத சூழ்நிலைகளில் மட்டுமே உங்கள் படைப்பாற்றல் வெளிப்படுகிறது.

துலாம் :மிகவும் செல்வாக்கு கொண்ட நண்பர் ஒருவரால் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். எந்த தடையும் இன்றி ஒரு புதிய கூட்டு வணிகத்தை உங்களால் தொடங்க முடியும். உங்கள் செயல்திறனும் கடின உழைப்பும் பாராட்டப்படும்.

விருச்சிகம் :இன்று உங்கள் முதலாளியிடம் இருந்து நீங்கள் பாட்டு வாங்க நேரிடலாம். உங்களுடைய சகாக்களும் இணக்கமாக இல்லாமல், அரைமனதுடன் ஆதரவு அளிப்பார்கள். தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளில் நேர்காணல் மற்றும் இறுதி தேர்வுகளில் வெற்றியடைய தாமதமாகலாம்.

தனுசு :இன்று ஈகையும், கருணையும் மனதில் ஊற்றெடுக்கும். வெளிப்படையாகவும் திறந்த மனதுடனும் இருப்பதற்கான, பலன்களும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையின் கருத்துக்களை கேட்கவும்.நீங்கள் அவர்களுக்கு உரிய மதிப்பளிக்கும் உணர்வை ஏற்படுத்துங்கள்.

மகரம்: உங்கள் கடின உழைப்பும், தீட்டிய திட்டங்களும் வீணாகிவிடுமோ என ஏமாற்றம் அடையலாம். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பீர்கள். சில நேரங்களில் இந்த வேறுபாடுகள் சூடான விவாதங்களாகவும் மாறலாம். அத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கவலைகள் அதிகரிக்கும். ஆனால் நம்பிக்கையை இழக்காதீர்கள். சுரங்கப்பாதையின் முடிவில் நிச்சயம் ஒரு வெளிச்சம் இருக்கும். இந்த கொந்தளிப்பான சூழ்நிலையில் நீங்கள் நிச்சயம் வெல்வீர்கள்.

கும்பம்: எதிர்கால திட்டங்களால் கட்டுப்படுத்தப்படுவீர்கள். திட்டங்கள் தீட்டுவது சரிதான் என்றாலும், உங்கள் கனவுகளை நனவாக்க இன்றைய காலகட்டத்திலேயே அதற்கான சக்தியைப் பெறவேண்டும் என்பதால், நிதர்சனத்தில் வாழ வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பணியிடத்தில் உங்களுடைய தாராள மனப்பான்மை ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் நற்பெயரை அதிகரிக்கும்.

மீனம்: வாழ்க்கையில் நிதி திட்டமிடல் என்பது இன்றியமையாதது, இன்று அதற்காக உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். திடீரென்று பண இழப்பு ஏற்படலாம். குடும்பத்தினரில் ஒருவர் திடீரென நோய்வாய்ப்படுவதால் கவலை ஏற்படலாம். இருப்பினும், இந்த நிலை விரைவில் மாறிவிடும். இந்த கவலை, உங்களுக்கு பெரிய அழுத்தமான சுமையாக மாறவிட வேண்டாம்.

இதையும் படிங்க: Weekly Horoscope: மே 3 வது வாரத்திற்கான ராசிபலன்

ABOUT THE AUTHOR

...view details