தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: ஜூலை 6 - இன்றைய ராசிபலன் - astrology

TODAY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ( ஜூலை 6) ராசி பலன்களை காண்போம்.

TODAY HOROSCOPE
TODAY HOROSCOPE

By

Published : Jul 6, 2022, 6:42 AM IST

Updated : Jul 6, 2022, 7:35 AM IST

மேஷம் :நீங்கள் தனிமையில் இருக்க விரும்புவீர்கள். மற்றவர்கள் அளிக்கும் பங்களிப்பை நீங்கள் பாராட்டுவீர்கள். நீங்கள் உங்கள் சக பணியாளர்களிடம் உங்களது நிபுணத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தினால், ஆதாயம் பெறலாம்.

ரிஷபம் :இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நீங்கள் திட்டமிட்டபடி கவனத்துடன், நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்படுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நீங்கள் சிறந்த வழிகளைக் கடைப்பிடிப்பீர்கள். இன்று நீங்கள் ஒரு சிறந்த வல்லுநர் போல் செயல்பட்டு, அனைத்து பணிகளையும் நிறைவு செய்வீர்கள்.

மிதுனம் :இன்று வீட்டைப் பொறுத்தவரை, மகிழ்ச்சி, சந்தோஷம், குதூகலம் நிலவும். குழந்தைகளுடன் நீங்கள் அதிக நேரத்தை செலவிட்டு, வீட்டை அலங்கரிப்பதற்கான வேளையில் ஈடுபடுவீர்கள். வீட்டில் நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த விஷயங்களுக்கு தீர்வு காண்பீர்கள்.

கடகம் :இன்றைய தினத்தை பொறுத்தவரை, நீங்கள் கடினமாக உழைத்த பணத்தை செலவிடுவதில் எச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். தேவையில்லாத நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவும், உங்களுக்கு நெருக்கமானவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவும் நீங்கள் அவ்வாறு செயல்படுவது நல்லது. உங்கள் பணியிடத்தில் வேலை பார்க்கும் உங்கள் தன்மையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.

சிம்மம் :உங்களுக்கு அனைத்தும், தங்கத் தட்டில் வைத்து கொடுக்கப்படும் என்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டாம். உங்கள் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. இன்று நீங்கள் பொறுமையாக செயல்படுவது நல்லது. உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் இல்லாமல் இருக்கும்.

கன்னி :உங்களை சுற்றியுள்ளவர்கள், உங்களைப் பார்த்து வியந்து ஊக்கம் பெறுவார்கள். உங்களின் அறிவாற்றலும், எல்லோரையும் அனுசரித்து செயல்படும் திறனும் அனைவரையும் கவரும். காதல் வாழ்க்கையை பொறுத்தவரை உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இன்று குடும்பத்தினருடன் நல்ல நிலையில் நேரம் செலவழிப்பீர்கள். குடும்பப் பொறுப்புகள் மற்றும் விஷயங்களில் உங்கள் குடும்பத்தினர் மீது அதிக கவனம் செலுத்தவும்.

இதையும் படிங்க:Weekly Horoscope: ஜூலை முதல் வாரத்திற்கான ராசி பலன்!

துலாம் :முயற்சிகள் எதுவுமே வீண் போகாது. அவைகள் தற்போது பயன் அளிக்கவில்லை என்றாலும், வருங்காலத்தில் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இன்று, நேர்காணலை பொறுத்தவரை பொதுவாக ஆக்கப்பூர்வமான நாளாக இருக்காது. எனினும் முயற்சியை கைவிடாமல் இருந்தால், வருங்காலத்தில் அதற்கேற்ற பலனை அடைவீர்கள்.

விருச்சிகம் :வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, இது அது போன்ற ஒரு நாளாக இருக்கும். வர்த்தகத்தில், போட்டி நிறைந்த நிலையில், அதைக் கையாளும் உத்திகளை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். உங்களது திறமையின் காரணமாக, சிலர் பொறாமைப்பட்டாலும், இது எதுவும் உங்களை பாதிக்காது. தவறுகள் மனித இயல்பு என்பதால், தவறு செய்தால் கவலை கொள்ள வேண்டாம்.

தனுசு :நீங்கள் இன்று புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு, உங்கள் குழந்தைகளின் விஷயங்கள் மீது கவனம் செலுத்துவீர்கள். அவர்களுடன் நீங்கள் இனிமையாக நேரத்தை செலவழிப்பீர்கள். அவர்களுடன், அர்த்தமுள்ள வகையில் கருத்து பரிமாற்றம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், தங்கள் கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். குதுகலமான மாலையாக இருக்கும்.

மகரம் :திருமணம் ஆகாதவர்கள் என்றால், நீங்கள் கனவில் சந்திக்கும் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கைத் துணையை சந்தித்ததில், நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களிடம் நீங்கள் மனம் திறந்து பேசுவீர்கள். உங்கள் காதல் துணையும் உங்கள் மீது, நிபந்தனையற்ற அன்பைப் பொழிவார்கள்.

கும்பம் :இன்று உங்களுக்கு குதூகலம் நிறைந்த நாளாக இருக்கும். ஆனால் உங்கள் சக பணியாளர்கள், தங்கள் வேலையை முடிக்க அதற்கான காரணங்களை உங்களிடம் தெரிவிப்பார்கள். அதனால் உங்களது பொறுப்புகளை நீங்களே முடிப்பது நல்லது. உங்கள் மனதிற்குப் பிடித்தவர், உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மீனம் :இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நீங்கள் விரும்பிய அனைத்தையும் செய்யலாம். உங்களது குழுவிற்கு, உங்கள் அனுபவத்தின் மூலம், செயல்திறனை நிரூபிக்க இயலும். உங்களை அனைவரும் போற்றுவார்கள். பெண்களுக்கு லாபம் கிடைத்து அதன் மூலம் ஊக்கம் பெறுவார்கள்.

இதையும் படிங்க: இதையும் படிங்க:New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ

Last Updated : Jul 6, 2022, 7:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details