தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: ஜூலை 3 - இன்றைய ராசிபலன் - astrology

TODAY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ( ஜூலை 3) ராசி பலன்களை காண்போம்.

TODAY HOROSCOPE
TODAY HOROSCOPE

By

Published : Jul 3, 2022, 7:03 AM IST

மேஷம் :இன்று, நீங்கள் திறமையாக வேலை செய்யவதற்கான புதிய வழிகளை தேடுவீர்கள்.உங்கள் உறவு பாதிக்கப்பட்டுள்ளதா? அப்படியானால், உங்கள் வாழ்க்கை துணை உடனான மனக்கசப்பைத் தீர்க்கும் நேரம் இது. ஒரு குறுகிய பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், மனதிற்கு பிடித்தவர்களுடன் வெளியில் செல்வது பலன் தரும்.

ரிஷபம் :வர்த்தகத்தில், இலக்கைச் சென்றடைவதற்கு நீங்கள் இன்று உறுதியாக இருப்பீர்கள். இந்த மதியம், நிதிச்சுமை உங்களுக்கு கவலையைக் கொடுக்கும். நீங்கள் உங்கள் சூழ்நிலையை நன்கு கையாளவதன் நிலைமையை சமாளிப்பீர்கள். உங்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம்.

மிதுனம் :பணியிடத்தில் உங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்த நீங்கள் மேலும் கடினமாக உழைக்க நேரிடலாம். வேலையை பொருத்தவரை, பணியில் மூத்தவர்கள் மற்றும் சக பணியாளர்கள் உங்கள் ஈடுபாடு மற்றும் அர்பணிப்பை பாராட்டுவார்கள். மாலையில் நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

கடகம் :பழைய தொடர்புகள் மூலம் உங்களுக்கு உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நல்ல வகையில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் உங்கள் திறன் காரணமாக, மற்றவர்கள் பணியில் உங்களுக்கு உதவுவார்கள். உங்களது நேர்மையின் காரணமாக, மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து இருப்பார்கள். மாலையில், சமூக நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்துகொண்டு, சிறப்பிப்பீர்கள்.

சிம்மம் :இன்றைய தினத்தில், காலையில் நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடைவதில், உங்களுக்கு சிரமம் ஏற்படக் கூடும். ஆனால் நேரம் செல்லச் செல்ல பிரச்சினைகள் தீரும். உங்கள் செயல்திறன் காரணமாக, வெற்றிப்படியில் நீங்கள் ஏறிச் செல்வீர்கள். நீங்கள் உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை, நேர்மையுடன், பாரபட்சம் ஏதுமில்லாமல் ஆராய்வார்கள்.

கன்னி :மற்றவர்கள் நினைப்பதை விட, நீங்கள் சுயநலம் இல்லாமல் அடுத்தவர் நலனுக்காக அதிகம் பணியாற்றுவீர்கள். இன்று மாலையில், நண்பர் அல்லது கூட்டாளியுடன் மேற்கொண்ட பணியின் மூலம் லாபம் கிடைக்கும். மாலையில் வர்த்தக வெற்றியின் காரணமாக விருந்து கொள்ள நேரிடும். நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது சக பணியாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விருந்தாக இருக்கலாம் அல்லது மற்றவர் உங்களுக்கு அளிக்கும் விருந்தாக இருக்கலாம்.

துலாம் :நீங்கள் இன்று , சுகாதாரத்தின் மீது அதிக செலுத்துவீர்கள், இன்று வழக்கத்திற்கு மாறாக நீங்கள், உங்கள் காரை சுத்தம் செய்யலாம் அல்லது வீட்டில் உள்ள மர சாமான்களை ஒழுங்குபடுத்தலாம். மதிய நேரத்தில் வீட்டை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளலாம். பொதுவாக மன அழுத்தத்தை, அன்பான அணுகுமுறையின் மூலம், போக்கி விடுவீர்கள்.

விருச்சிகம் :இன்று நீங்கள், ஆக்கப்பூர்வமான வகையில் செயல்படுவீர்கள். உங்களது ஈடுபாட்டுடன் கூடிய பணியின் காரணமாக, மற்றவர்களும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். திருமண உறவு மிகவும் சிறந்த வகையில் இருக்கும். மொத்தத்தில் என்று குதூகலமான நாளாக இருக்கும்.

தனுசு :இன்று நீங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் கழித்து விரும்புவீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல விரும்புகிறீர்கள். இதற்கிடையில், நீங்கள், பணியைச் செய்து முடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதற்கான பாராட்டையும் பெறுவீர்கள்.

மகரம் :இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, மற்றவர்களது உணர்வுகள் குறிப்பாக, காதல் துணையின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். இருவரும் மனம் திறந்து பேசினால், புரிந்துணர்வு ஏற்பட்டு, உறவு வலுப்படும். இருவரும் ஒன்றாக நேரம் கழிப்பதன் மூலமோ அல்லது இன்ப அதிர்ச்சி கொடுப்பதன் மூலமோ, உறவு வலுப்படும்.

கும்பம் :வழக்கமான வேலைப்பளுவிலிருந்து விலகி, இன்று ஒரு வித்தியாசமான நாளாக இருக்கும். நிம்மதியான உணர்வுடன், ஆன்மீகப் பாதையில் செல்ல விரும்புகிறீர்கள். நீங்கள் கோவில்கள் போன்ற இடங்களுக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டு நிம்மதி நாடுவீர்கள். துணிமணிகள் வாங்குவதற்காக நீங்கள் கடைகளுக்குச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

மீனம் :முதலீடுகள், குறிப்பாக ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீடு செய்வதற்கு இன்று சிறந்த நாளாக இருக்கும். பரிவர்த்தனைகளில், நஷ்டம் ஏற்படும் வாய்ப்பை விட, லாபம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். எனினும் நீங்கள் மற்ற விதத்தில் முதலீடு செய்வதற்காக, சிறிது நிதியை ஒதுக்கி வைப்பீர்கள்.

இதையும் படிங்க:இதையும் படிங்க:New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ABOUT THE AUTHOR

...view details