மேஷம்:இன்று, உங்கள் சொந்தத் திறமையிலேயே உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தெய்வீக ஆற்றலின் உதவியில்லாமலேயே அதை நீங்கள் பெறுவீர்கள். விஞ்ஞானம் அல்லது கலைத் துறை மாணவராக நீங்கள் இருந்தாலும் விஷய ஞானம் மற்றும் ஆழமான அறிவு காரணமாக நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். மேற்படிப்புக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்:இன்று, நீங்கள் மற்றவர்களை ஈர்ப்பதோ, தாக்கத்தை ஏற்படுத்துவதோ சற்றே கடினமானதே. நல்லது செய்யத் தீர்மானித்திருந்தாலும் கூட சில ஆரம்ப பின்னடைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனினும், இறுதி வெற்றி நிச்சயம்.
மிதுனம்:மதம், கலாச்சாரம், மற்றும் அறிவுசார் பணிகளில் நாள் முழுவதும் ஈடுபட்டிருப்பீர்கள். சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அவசியமாக வேண்டும். தொண்டு நிறுவனம் அல்லது அறக்கட்டளை பணிகளுக்காக செலவுகள் செய்வீர்கள். வணிக ஒப்பந்தங்கள் மேற்கொள்ள சிறந்த நாள்.
கடகம்:அசாதாரணமான முறையில் சில புதிய சூழ்நிலைகளைக் கையாள நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று முன்னெச்சரிக்கை செய்கிறோம். நாளின் பிற்பகுதியில் பொது உளவியல் தொடர்பான சில படிப்பினைகளை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். எந்த முக்கியமான முடிவையும் எடுப்பதற்குக் முன்னதாக, நடுநிலைமையான மனோநிலையில் நின்று, சாதக பாதகங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
சிம்மம்:உங்கள் மனநிலையை இன்று கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் மனநிலையில் பல மாறுதல்கள் ஏற்படலாம். குறிப்பாக காலை நேரத்தில் எரிச்சலூட்டும் மனோநிலை நிலவலாம். இன்று நிறைய விஷயங்களை நீங்கள் கையாள வேண்டியிருக்கலாம். இதனால் பதற்றங்கள் அதிகரிக்கலாம். ஓரிரு நாட்களில் உங்களுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
கன்னி:தயவுசெய்து சிறிய விஷயங்களில் தலையிட வேண்டாம், அது நெருங்கிய உறவுகளை சேதப்படுத்தக்கூடும். நீதிமன்றத்துக்கு வெளியில் சமரசமாக சட்ட விஷயங்கள் முடிவுக்கு வரும். மாலையில், உங்கள் மகிழ்ச்சிக்காக ஓரளவு பணத்தைச் செலவழிக்கலாம். தாராளமாக கிரெடிட் அட்டையைப் பயன்படுத்தி தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.