தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: ஆகஸ்ட் முதல் வாரத்திற்கான ராசிபலன்... - ஆகஸ்ட முதல் வாரத்திற்கான ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான (ஜூலை 31 - ஆகஸ்ட் 6) வார ராசிபலன்களை காண்போம்.

horoscope  week horoscope  august 1st week horoscope  ராசிபலன்  ஆகஸ்ட முதல் வாரத்திற்கான ராசிபலன்  வார ராசிபலன்
Weekly Horoscope

By

Published : Jul 31, 2022, 11:23 AM IST

Updated : Jul 31, 2022, 11:30 AM IST

மேஷம்: பொதுவான பலனளிக்கும் வாரமிது. தம்பதியருக்கு அமைதியான வாழ்க்கை அமையும். காதலிப்பவர்கள் தங்கள் துணையை குடும்ப உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். வேலை செய்பவர்கள் வேலையில் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளலாம். உங்கள் திறமை வளரும். இந்த வாரம் வியாபாரிகளுக்கு லாபகரமான பலன்களைத் தரக்கூடும். இப்போது, மேலும் சிலரைச் சேர்த்து வேலையை விரிவுபடுத்துவது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டியிருக்கலாம்.

மாணவர்களைப் பற்றி பேசுகையில், வாரத்தின் தொடக்கத்தில், உங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். படிப்பில் உள்ள பிரச்னைகளை சமாளிப்பதை எளிதாக்கக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலத்தில் சில பிரச்னை ஏற்படலாம். எனவே, உணவில் கவனம் செலுத்த வேண்டும். வாரத்தின் தொடக்கத்தில் பயணம் மேற்கொள்வது நல்லது.

ரிஷபம்: உங்களுக்கு ஒரு நல்ல வாரமிது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அன்பு அதிகம் செலுத்துவதால் உறவு வலுவாக மாறும். காதலிப்பவர்களுக்கு புதிய நம்பிக்கைகளை கொண்டு வரும். காதலியுடன் அன்பாக இருப்பீர்கள். குடும்பத்தின் மீதான பொறுப்புகள் குறித்த உணர்வுகள் உங்களுக்குள் எழலாம். எனவே, நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். கணக்கிட முடியாத வீட்டிற்கான செலவுகள் ஏற்படலாம். உங்களில் பலர் உங்கள் வேலைக்கும் வீட்டிற்கும் இடையில் சமநிலைப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வேலையில் கடினமாகவும் புத்திசாலியாகவும் இருக்கலாம். இதன் காரணமாக, உங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். தொழில்புரிபவர்கள் புதியவர்களுடன் இணைவதன் மூலம் தங்கள் வியாபாரத்தை முன்னேற்ற முயற்சி செய்யலாம்.

மாணவர்கள் படிப்பில் கவணம் செலுத்த வேண்டும். அவர்கள் அதிலிருந்து நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடல்நலப் பிரச்னைகள் பெரிதாக பாதிக்கப்படும் அளவிற்கு எதுவுமில்லை. உணவை சற்று கவனமாக இருங்கள். வாரத்தின் நடுப்பகுதியில் பயணம் மேற்கொள்வது நல்லது.

மிதுனம்:இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உறவில் ஒரு ஈர்ப்பு இருக்கும், மேலும் நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். நெருங்கிய உறவுகள் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படலாம். நண்பர்களுடன் சேர்ந்து வாரத்தின் தொடக்கத்தில் பயணத்திற்காக திட்டமிடலாம். இந்த பயணம் உங்களுக்கு அமைதியைத் தரும். தொழிலில் ரிஸ்க் எடுத்தால் அது நன்மையையே கொடுக்கும். சில புதியவர்களுடன் இணைவதற்கான வாய்ப்பையும் பெறுவீர்கள்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வேலையை அனுபவித்து, அதில் நிபுணராக மாறுவீர்கள். இது பெரும் நன்மை பயக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். படிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் மட்டுமே உங்கள் செயல்திறன் மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் ஆரோக்கியம் இப்போது நன்றாக இருக்கும். இருப்பினும், ஒரு சிறிய பிரச்னை ஏற்பட்டால், அதை புறக்கணிக்க வேண்டாம். மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சையளிக்கவும். வாரத் தொடக்கத்தில் பயணம் மேற்கொள்வது நல்லது.

கடகம்: வாரத் தொடக்கத்தில், உங்கள் குடும்பத்தின் நலன் குறித்து யோசித்து அவர்களுக்காக ஏதாவது நல்லது செய்ய முடிவு எடுப்பீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில், பயணம் மேற்கொள்வது நல்லது. இது ஒரு மதப் பயணமாக இருக்கும். நண்பர்களுடனோ அல்லது குடும்ப உறுப்பினர்களுடனோ செல்ல வாய்ப்புள்ளது. வார இறுதியில் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கலாம். திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு தங்கள் உறவு குறித்த தீவிரத்தைக் காட்ட வேண்டியிருக்கும். எனவே, காதல் துணை ஈர்க்கப்படுவார்.

உங்கள் வேலையிலும் கவனம் செலுத்த வேண்டும். இப்போது வேலையில் சில பிரச்னைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். வியாபாரம் பெருகும் என்பதால் இந்த வாரம் தொழில்புரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் தொலைநோக்குப் பார்வை உதவக்கூடும். மாணவர்களுக்கு இது ஒரு நன்மை பயக்கும் வாரமாக இருக்கும். நீங்களும் படிக்க வேண்டும் என்று உணர்வீர்கள். சிறிய உடல்நலப் பிரச்னைகள் இருக்கலாம். வாரத் தொடக்கத்தில் பயணம் மேற்கொள்வது நல்லது.

சிம்மம்:உங்களுக்கு சிறந்த வாரமாக அமையும். திருமணமானவர்கள் வாழ்க்கையில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடலாம். வாழ்க்கைத் துணையின் பலவீனமான ஆரோக்கியத்தின் காரணமாக இது நிகழலாம். காதலிப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. உங்கள் காதலியிடம் இருந்து அன்பைப் பெறுவீர்கள்.

முழு ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் அனைத்தையும் செய்யலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், அவர்களுக்கு நல்லது செய்யவும் நீங்கள் நினைப்பீர்கள். அது உங்களை வலுவாக்கிவிடும். உங்கள் செயல்திறன் உங்களை முன்னோக்கி வைத்திருக்க வாய்ப்புள்ளது.

ரிஸ்க் எடுப்பதால் தொழிலில் லாபம் ஏற்படும். நீண்ட கால முதலீடுகள் இந்த நேரத்தில் உங்களுக்கு நன்மைகளைத் தரும். வேலை செய்பவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான வாரம். உங்கள் துறையில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கேற்பீர்கள். வேலை மேம்படும். மாணவர்களை பொறுத்த வரை, அவர்கள் படிக்க வேண்டும் என்று உணர்வார்கள். அதனால் படிப்பிலும் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பயண மேற்கொள்வதற்கு இந்த வாரம் ஏற்றது.

கன்னி:உங்களுக்கு மிதமான பலன் தரும் வாரமிது. காதலிப்பவர்களின் உறவில் வெளியாட்களின் தலையீடு இல்லாமால் பார்த்துக்கொள்ளுங்கள். அது காதல் உறவை அனுபவிக்க உதவும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையும் நன்மை அடையலாம். இதன் காரணமாக, குடும்ப வாழ்க்கை மிகவும் இனிமையானதாக மாறும்.

வியாபாரிகளுக்கு இந்த வாரம் நல்ல வருமானம் கிடைக்கும். லாபம் அதிகரித்து நல்ல நேரமாக அமையும். வேலை செய்பவர்கள் வேலையை நேசிப்பார்கள். சம்பந்தி வீட்டுடன் மோதல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே கொஞ்சம் கவனமாக இருங்கள். மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்த வேண்டும். தியானம் மேற்கொண்டால் நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வலுவாக இருக்கும். எனவே, நம்பிக்கையும் நன்றாக இருக்கும். வார மத்தியிலும் கடைசி நாட்களிலும் பயணம் மேற்கொள்வது நல்லது.

துலாம்: உங்களுக்கு பொதுவாக பலனளிக்கும் வாரமிது. திருமணமானவர்களுடைய வாழ்க்கை பதற்றம் தணிந்து சாதாரணமாக அமையும். காதலிப்பவர்களுக்கு, இந்த வாரம் புதிய சிந்தனையை கொண்டு வரும். உறவைப் பல வழிகளில் எடைபோடுவதன் மூலம் நீங்கள் அதை எதிர்பார்க்கலாம். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். பணம் எங்கிருந்தோ வரும். நிலுவையில் இருந்த வேலைகளும் முடிக்கப்படும். எனவே பண புழக்கம் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில், நீதிமன்ற வழக்குகள் ஏற்படலாம், சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் எதிரிகள் சுறுசுறுப்படைவதால், நீங்கள் பலவீனமாக இருப்பதாக தோன்றலாம்.

வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை அனுபவித்து மகிழலாம், அது மேம்படும். இந்த வாரம் தொழில்புரிபவர்களுக்கு சிறப்பானதாக இருக்காது. உங்கள் பங்குதாரர்களுடனான உறவு மோசமடையக்கூடும், எனவே கவனமாக இருங்கள். மாணவர்களை பொறுத்த வரை படிப்பில் ஆர்வம் பெறும். உயர் கல்வியில் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உடல்நலத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது. வாரக் கடைசியின் மூன்று நாள்கள் பயணம் மேற்கொள்வதற்கு ஏற்றது.

விருச்சிகம்: பொதுவான பலனளிக்கும் வாரமிது. திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் உறவில் நீங்கள் திருப்தி அடைவீர்கள். காதலிப்பவர்கள் உறவின் ஆழத்தை புரிந்து கொள்வார்கள். காதல் துணையை மீண்டும் மீண்டும் சந்திக்க வலியுறுத்தக்கூடாது. இது உங்கள் உறவுக்கு முதிர்ச்சியைக் கொண்டு வர வாய்ப்புள்ளது. தேவையில்லாமல் அடுத்தவரின் பிரச்னையில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் அது உங்கள் வாழ்க்கையை பாதிக்கலாம்.

வேலை செய்பவர்களுக்கு வழக்கமான வாரமாகவே இருக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில்புரிபவர்களுக்கு நல்ல நேரம். தொழிலில் வெற்றி பெற்று முன்னேறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடலில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இரத்த அழுத்தம் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். வாரத் தொடக்கத்தில் பயணம் மேற்கொள்வது நல்லது.

தனுசு:இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் தந்தையைக் கட்டிப்பிடித்து உங்கள் அன்பை அவரிடம் வெளிப்படுத்துவதன் மூலம் உங்கள் மனதை ஒளிரச் செய்வீர்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு சாதகமானதாக இருக்கும். இது உங்கள் வேலையில் வெற்றியைத் தரும். திருமணமானவர்களுக்கு அன்பினால் முன்னேற்றம் காண்பீர்கள். காதலிப்பவர்கள் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் காதல் துணை கோபமடைந்து உங்களை விட்டு விலகிச் செல்லலாம். நீங்கள் அவரை சம்மதிக்க வைக்க முயற்சிக்க வேண்டும்.

இந்த வாரம் தொழில்புரிபவர்களுக்கு லாபகரமாக இருக்கும். பணம் எங்கிருந்தோ வரும். இதன் காரணமாக, உங்கள் வருமானமும் மேம்படும். இந்த வாரம் தொழிலதிபர்களுக்கோ அல்லது வேலை செய்பவர்களுக்கோ வழக்கமானதாக இருக்கும். கடின உழைப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. மாணவர்கள் படிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அதனால் அவர்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரிய பிரச்னை எதுவும் இருக்காது. இருப்பினும், உணவில் கவனம் செலுத்துங்கள். வாரத் தொடக்கத்தில் பயணம் மேற்கொள்வது ஏற்றது.

மகரம்: கலவையான முடிவுகளை கொண்ட வாரமிது. திருமணமானவர்களுக்கு இது ஒரு நல்ல வாரமாக இருக்கும். அன்போடு வாழ்வீர்கள். காதலிப்பவர்களுக்கும் நல்ல வாரமாக இருக்கும். உங்களிடையே அன்பு அதிகரிக்கும். வாரத் தொடக்கத்தில் எந்தவொரு புதிய வேலையிலும் ஈடுபடுவதற்கு முன்பு கவனமாக இருப்பது நல்லது. வார நடுப்பகுதியில் நீங்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் உதவியுடன், உங்களுடைய பல திட்டங்கள் முடிக்கப்படும். நீங்கள் எதிர்பார்க்காத சில விஷயங்களும் ஏற்படலாம்.

வியாபாரம் சூடுபிடிக்கும். இதன் பலனையும் அடைவீர்கள். எந்தவொரு அரசாங்கத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் ஏற்படும். தொழில்புரிபவர்களுக்கு இந்த வாரம் அசாதாரணமானதாக இருக்கலாம். உங்கள் வேலையை அர்ப்பணிப்புடன் செய்வீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பு குறித்து ஒருவரின் வழிகாட்டுதல் தேவைப்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆனால் மார்பில் வலி அல்லது வயிற்றில் பிரச்னை ஏற்படலாம். வாரத்தின் நடுப்பகுதியில் பயணம் மேற்கொள்வது நல்லது.

கும்பம்: உங்களுக்கு ஒரு பயனுள்ள வாரமிது. திருமணமானவர்களின் திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பார்கள் சில பயனுள்ள ஆலோசனைகளை வழங்குவார்கள். காதலிப்பவர்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்வார்கள். இப்போது கடனை அடைப்பதில் வெற்றியைப் பெறுவீர்கள்.

தொழில்புரிபவர்களுக்கு இந்த வாரம் வழக்கமானதாக இருக்கும். தொலைதூர பகுதிகளில் இருந்தோ அல்லது மாநிலங்களுடன் இணைந்தோ வேலை செய்வது நன்மையை பயக்கும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் சிறந்து விளங்குவார்கள், கடினமாக உழைக்கவேண்டும். உங்கள் சக ஊழியர்களிடமிருந்து வேலையை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் அதைச் செய்வதில் சிறிது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் சக ஊழியர்களுடன் தனிப்பட்ட முறையில் எதையும் விவாதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் சக ஊழியர்கள் அதை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மாணவர்கள் படிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும். மாணவர்கள் போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். எனவே, நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். வாரத்தின் கடைசி நாட்கள் பயணம் மேற்கொள்வது நல்லது.

மீனம்: உங்களுக்கு ஒரு மிதமான வாரமிது. திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் திருப்தி அடைவார்கள். வேலைகளில் வருமானத்தை அதிகரிப்பதற்காக வாழ்க்கைத் துணை உங்களுக்கு சில ஆலோசனை கூறுவார்கள். தொழிலதிபர்கள் வாழ்க்கைத் துணையின் ஆலோசனையைப் பெறலாம். இது பயனுள்ளதாக மாறக்கூடும். எதிராளியின் வார்த்தைகள் மூலம் உங்கள் அலுவலகத்தில் யாருடனும் சண்டையிட வேண்டாம். நீங்கள் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் மன அழுத்தமும் அதிகரிக்கலாம்.

இந்த வாரம் பொறுமையாக கடந்து செல்வது நல்லது. இந்த வாரம் வணிக கண்ணோட்டத்தில் நன்றாக இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களைப் பற்றி பேசுகையில், இப்போது அவர்கள் தங்கள் படிப்பில் கடினமாக உழைக்கவேண்டும். இதிலிருந்து நேர்மறையான முடிவுகளை பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு நல்லதாக இருக்கும். இருப்பினும், அதிக வறுத்த உணவுகளை விலகியே வையுங்கள். வாரத்தின் கடைசி நாள் பயணம் மேற்கொள்வது நல்லது.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: ஜூலை 31 - இன்றைய ராசி பலன்

Last Updated : Jul 31, 2022, 11:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details