தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராசிபலன் - இன்று நல்ல நாள் - இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காண்போம்.

இன்றைய ராசிபலன்கள்
இன்றைய ராசிபலன்கள்

By

Published : Sep 4, 2021, 6:00 AM IST

மேஷம்

இன்றைய நாளைப் பொறுத்தவரை, நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதைப் போல் உணர்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த நீங்கள், முயற்சிகள் பலவற்றை மேற்கொள்வீர்கள். வருங்காலப் பாதுகாப்பிற்கான அம்சங்கள் என்ன என்பதை ஆராய்வீர்கள். அதனால் நீண்ட காலத்திற்கு வலுவாக இருக்கக்கூடிய உறவினை ஏற்படுத்துவீர்கள்.

ரிஷபம்

இன்றைய நாளைப் பொறுத்தவரை, உங்களுக்கு சிறிது கடினமான, பிரச்சினைகள் நிறைந்த நாளாக இருக்கும். பின்னடைவுகள், சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவும். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அதை எதிர்த்துப் போராடும் உங்களது மனப்பான்மை காரணமாக, அதற்கான தீர்வு கிடைக்கும். எச்சரிக்கையுடன் கவனமாகச் செயல்படவும். நன்றாகச் சிந்தித்து, பொறுமையாகச் செயல்படவும். இன்றைய தேவை அது மட்டுமே. தடைகள் உங்களை ஒன்றும் செய்யாது.

மிதுனம்

கடந்த கால நினைவுகள், மலரும் நினைவுகளாக உங்கள் மனத்தில் தோன்றும். அதனால் நீங்கள் குதூகலமாக இருப்பீர்கள். அறிவார்ந்த தேடல்களில் ஆர்வம் இருக்கும். உங்களது கடந்த காலம், உங்களது எதிர்காலம், நிகழ்காலத்தைப் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்.

கடகம்

இன்று, உங்களுக்கு வேலை செய்யும் ஆர்வம் அதிகம் இருக்கும். ஏதேனும் ஒரு டாஸ்க்கை எடுத்துக்கொண்டால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தோட்டப்பணி, சமையல் செய்தல், வீட்டிற்கு விருந்தினரை அழைத்து நேரம் செலவிடுதல் ஆகியவற்றிற்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், உங்கள் காதல் உறவிற்காக நேரம், பணம் ஆகியவற்றைச் செலவழித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சிம்மம்

விற்பனை, சந்தைப்படுத்துதல் தொடர்பான பணியில் இருப்பவர்கள், மேற்கொள்ளும் சந்திப்புகள் பலன் தரும். எனினும், பயணத்தில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்களிடமுள்ள திறமைகளை அறிந்துகொள்ள இது சரியான நேரமாகும். அடுத்த 2-3 நாள்களில், உங்களது திறமையை நிரூபிப்பீர்கள்.

கன்னி

தினசரி பணிகளிலிருந்து விலகி, உங்களுக்கான நேரத்தைச் செலவிடுவீர்கள். சோர்வைத் தரும் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு, மனத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் பணிகளை மேற்கொள்ளவும். தனிப்பட்ட அல்லது சமூக அளவிலான சந்திப்புகளில் நீங்கள் கலந்து கொள்ளக் கூடும். மற்றவர்களுடன் கலந்து பழகுவது, உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.

துலாம்

நீங்கள் உங்கள் குடும்பத்தின் மீதும், குடும்ப விவகாரங்களின் மீதும் கவனம் செலுத்துவீர்கள். வீட்டின் அலங்காரத்தை மாற்றி புதுப்பிக்க விருப்பம் இருக்கும். வீட்டிற்கான புதிய பொருள்களை வாங்குவீர்கள். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள்.

விருச்சிகம்

உடல்நலம் பாதிப்பு காரணமாக நீங்கள் உடல்நலனில் கவனம் செலுத்துவீர்கள். உங்களது பழக்கவழக்கத்தை மாற்றி, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, உடற்பயிற்சி செய்யவும்.

தனுசு

இன்று உங்களுக்கு அனைத்துத் தரப்பிலும் வெற்றி கிடைக்கும். எந்தச் சவால்களை எடுத்துக் கொண்டாலும் நீங்கள் அதை வெற்றிபெறுவீர்கள். உங்களிடம் ஆலோசனை கேட்கும், சக பணியாளர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டுவீர்கள். நீங்கள் இன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மகரம்

உணர்வுரீதியாகச் செயல்படுவது, பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். அது உங்களது தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் ஆகிய இரண்டையும் பாதிக்கும். இதைப் பயன்படுத்தி, உங்களைச் சுற்றி இருப்பவர்கள், உங்களை வீழ்த்த முயற்சி செய்யலாம். அதனால் உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, வெற்றிக்கான பாதையில் முன்னேறிச் செல்லவும்.

கும்பம்

இன்று போட்டியாளர்கள், உங்களைப் பார்த்து ஆச்சரியம் கொள்வார்கள். அதனால் நீங்கள் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். உங்களது திறமையான செயல்பாட்டின் காரணமாக, அனைத்துப் பிரச்சினைகளும் காணாமல் போகும். உங்களது வெற்றி, கருணை, கடின உழைப்பின் காரணமாக, அனைவரது மனத்தையும் வெல்வீர்கள்.

மீனம்

இன்று நீங்கள் உணர்வுக்கு மதிப்பளித்துச் செயல்படுவீர்கள். கேள்விகளுக்கான பதில்களைப் பெற, உங்களை நீங்களே ஆராய்ந்து கொள்வீர்கள். உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை காரணமாக, முடிக்கப்படாமல் இருந்த பணிகள் முடிக்கப்படும். உங்களது விதி அதிருஷ்டத்தைக் கொடுக்கும். அறிவார்ந்த விஷயங்கள் மீது ஆர்வம் செலுத்தவும். பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.

இதையும் படிங்க: சீனாவில் எதிரொலிக்கும் கீழடியின் பெருமை

ABOUT THE AUTHOR

...view details