தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராசிபலன் - இன்றைய நாள் எப்படி? - இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காண்போம்.

இன்றைய ராசிபலன்கள்
இன்றைய ராசிபலன்கள்

By

Published : Sep 10, 2021, 6:17 AM IST

மேஷம்

உங்கள் மனத்திற்குப் பிடித்தவரைச் சந்தோஷப்படுத்த நீங்கள் முயற்சி செய்யக்கூடும். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மீது ஏதேனும் ஒரு காரணத்திற்காக வருத்தம் இருக்கலாம். எனினும் இன்று இன்று இரவில் நடக்கும் சந்திப்பில், புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு அதிர்ச்சிகள் காத்திருக்கக் கூடும். திட்டமிடப்பட்டபடி அல்லது எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காது. திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். நாள் முழுவதும் பிரச்சினை இருக்கும். ஆனால் பொறுமையாகச் செயல்பட்டு நீங்கள் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடுவீர்கள்.

மிதுனம்

உங்களைச் சுற்றியிருக்கும் மக்களிடம், நீங்கள் ஆராய்ந்த விஷயங்களை, எடுத்துக் கூறுவீர்கள். அவர்களும் உங்களது உணர்வுகள், எண்ணங்களைப் புரிந்துகொள்வார்கள். உங்களது எண்ணங்கள் ஈடேற அவர்கள் ஒப்புதல் வழங்குவார்கள். பொதுவாக இன்று வேடிக்கை, குதூகலம் நிறைந்த நாளாக இருக்கும்.

கடகம்

பணியிடத்தில், சிறந்த கூட்டாளி உறவை ஏற்படுத்தும் உங்களது திறமையின் காரணமாக, முக்கியத் திட்டங்களில் வெற்றி காண்பீர்கள். ஆனால் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன், அதனையே முழுமையாகப் படித்து அறிந்துகொள்வது நல்லது. ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும்போது கவனமாகச் செயல்படுவது முக்கியம்.

சிம்மம்

பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்கவும் புதிய தொடர்புகளை உருவாக்கவும், இன்று சிறந்த நாளாக இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வருகை தரக் கூடும். வீட்டில் சிரிப்பு மழை பொழியும். விருந்தினர்கள், உறவினர்களுக்கு நீங்கள் சிறந்த வகையில் விருந்து அளிப்பீர்கள்.

கன்னி

இன்று, வர்த்தகம் தொடர்பான பணிகள், பொழுதுபோக்கு ஆகிய இரண்டு இருக்கும் நேரம் ஒதுக்குவீர்கள். விருந்துகளில் அதிகம் கலந்துகொள்வீர்கள். நீங்கள் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறீர்களோ, அந்த அளவிற்குச் செலவு இருக்கும். எனினும் நீங்கள், செலவு செய்யும்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

துலாம்

இன்றைய நாளைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பீர்கள். அது பணியில் உள்ள ஈடுபாடு அல்லது குடும்பத்தின் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தும்விதமாக இருக்கும். வர்த்தகத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றி, நல்ல முடிவுகளை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்

இன்று நீங்கள் அன்பு செலுத்துபவர்களுக்காக அதிக அளவில் பணம் செலவழிப்பீர்கள். நமக்கு நெருக்கமானவர்களுக்குச் செலவழிக்கும்போது, பணத்தைப் பற்றி நினைக்கக் கூடாது அல்லவா? அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க, அல்லது பிற இடங்களுக்கு நீங்கள் கூட்டிச் செல்லக்கூடும்.

தனுசு

இன்று கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், சிறந்த நாளாக இருக்கும். உங்களது செயல்திறன் காரணமாகப் பாராட்டைப் பெறுவீர்கள். பணியில் எந்தவிதமான விவகாரங்களையும் நீங்கள் வந்தாலும் எளிதாகச் சமாளிப்பீர்கள். உங்களது அணுகுமுறையின் மூலம் அனைவரது மனங்களையும் வெல்வீர்கள்.

மகரம்

கடந்த கால நினைவுகள் உங்கள் மனத்தில் அலைமோதி, அதன் உந்துதல் காரணமாக, பழைய நண்பர்களை நீங்கள் சந்திப்பீர்கள். மற்றொருபுறம், உங்களுக்கு நெருக்கமானவர்கள், உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது போன்ற உணர்வு உங்களிடம் இருக்கும். எனினும் மனத்திற்குப் பிடித்தவர்கள் உடன், இனிமையாக மாலைப் பொழுதை கழிப்பது, சோர்வை நீக்கி, மகிழ்ச்சியாக இருக்க விரும்புவீர்கள்.

கும்பம்

இன்றைய நாளைப் பொறுத்தவரை உங்களுக்குச் சாதகமான நாளாக இருக்காது. வீட்டில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் சிரமம் இருக்கலாம். உங்கள் குழந்தைகள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள், நிலைமையை மேலும் மோசமாக்கும். குடும்பத்தில் சில சச்சரவுகள் காணப்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பிரச்சினையைப் பெரிதாக்க முயற்சி செய்வார்கள்.

மீனம்

நீங்கள் மோசமான குணமும் பொறாமை குணமும் கொண்டவரல்ல. ஆனால் இது போன்ற தன்மை ஏற்படாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒருவர் உங்கள் புகழையும் மதிப்பையும் கெடுக்கும் எண்ணத்தில் செயல்படலாம். எனினும் கோபப்படாமல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நிதானமாகச் செயல்பட்டால் இதனைத் தவிர்க்கலாம்.

இதையும் படிங்க:தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை தேடி உலகம் முழுவதும் பயணம் - மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details