தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE... அக்டோபர் முதல் வாரத்திற்கான ராசிபலன் - எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது? - அக்டோபர் மாத ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான அக்டோபர் மாதத்தின் முதல் வார ராசிபலன்களைக் காண்போம். இந்த ராசிபலன்கள் அக்டோபர் 01ஆம் தேதி முதல் அக்டோபர் 08ஆம் தேதி வரையிலானவை.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 2, 2022, 10:53 PM IST

மேஷம்: உங்களுக்கு இந்த வாரம் ஒரு சிறந்த வாரமாக அமையும். காதலிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாரமாக இருக்கும். திருமணமான தம்பதிகளின் குடும்ப வாழ்க்கையில் மனக்கசப்புகள் ஏற்படலாம். வார நடுப்பகுதியில், உங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தின் மீது நீங்கள் அக்கறை காட்ட வேண்டும். வாரத்தொடக்கத்தில் நீங்கள் வேலையில் சிறப்பாகச்செயல்பட்டால் தான் உங்கள் வேலையில் வெற்றிகிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைத்தால் நல்ல பலனைப் பெற வாய்ப்புள்ளது. வாரக் கடைசி நாட்களில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். இதனால் நீங்கள் அதிக மகிழ்ச்சியடைவீர்கள். மாணவர்களுக்கு ஒரு நல்ல வாரமாக அமையும். உங்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். இதனால் நீங்கள் சிறந்த முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றது.

ரிஷபம்: இந்த வாரம் உங்களுக்குப் பயனுள்ள வாரமாக அமையும். உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வியாபாரத்தின் மூலம் உங்களுக்கு பணவரவு கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியடைவீர்கள். வார நடுப்பகுதியில், மகிழ்ச்சி அதிகரிப்பதால் உங்கள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கும். வேலை செய்பவர்கள் வேலையில் நேர்மையுடன் சிறந்துவிளங்குவார்கள். வியாபாரம் செய்யும் வழிகளைப்புரிந்து கொண்டு அவற்றைச்செயல்படுத்த முயற்சிப்பீர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பயணம் செய்வதற்கு இந்த வாரம் முழுவதும் ஏற்றது.

மிதுனம்: மிதமான பலன்கள் கிடைக்கும் வாரமாக உங்களுக்கு அமையும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார். காதலிப்பவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வீர்கள். வீட்டின் சூழ்நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். பணவரவு கிடைக்கும். வேலையைச் செய்பவர்கள் தங்கள் வேலையை மகிழ்ச்சியாக செய்வீர்கள். பணிபுரிபவர்கள் பணியில் சிறந்து விளங்கினால் உயர் அலுவலரின் ஆதரவைப் பெறுவீர்கள். செலவுகள் இருக்கும், ஆனால், வருமானமும் அதிகரிக்கலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல பலனைப் பெறுவீர்கள். இது அவர்களுடைய புரிதலை நிச்சயமாகப் பலப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

கடகம்: இந்த வாரம் கற்பனையில் மிதக்கும் வாரமாக அமையும். காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். காதலிப்பவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு அன்பை வெளிப்படுத்துவீர்கள். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கையில் பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் எப்போதும் தனித்து செயல்படுவீர்கள். சொத்துகளிலிருந்து லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். இந்த வாரம் வியாபாரிகளுக்கு நல்ல வாரமாக அமையும். அரசாங்கத்திடமிருந்து ஒப்பந்தத்தைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை அனுபவித்து சிறந்து செயல்படுங்கள். உங்களில் பலர் சமூக ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக இருக்கலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு உதவும். அதனால் மகிழ்ச்சியடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். உடல்நலம் நன்றாக இருக்கும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

சிம்மம்: இந்த வாரம் உங்களுக்குப் பொதுவாக பலனளிக்கும் வாரமாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். காதலிப்பவர்களுக்கு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல செய்தி கேட்கலாம். நல்ல உணவை அனுபவித்து உண்பீர்கள். உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். புதிய திட்டங்கள் உங்களுக்கு ஒரு சவாலாக இருக்கும். அதனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் வேலையில் முன்னேற்றம் அடையலாம். நீங்கள் வெவ்வேறு வழிகள் மூலம் வேலையைத் தொடர்வீர்கள். இந்த வாரம் வேலையில் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச்செயல்படுவீர்கள். மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறலாம். இது உங்கள் மன உறுதியை உயர்த்தக்கூடும். அதனால் மகிழ்ச்சியடைவீர்கள். படிப்பில் நல்ல முடிவுகளை நீங்கள் பெறுவீர்கள். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். வாரக் கடைசி நாள் பயணத்திற்கு ஏற்றது.

கன்னி: இந்த வாரம் உங்களுக்கு சிறந்த வாரமாக இருக்கும். உங்கள் குடும்பத்தின் தேவைகளைப் புரிந்து கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச்செலவிடுங்கள். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பத்துடன் ஒரு நீண்ட பயணத்தைத் திட்டமிடுவீர்கள். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் திருப்தி அடைவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு சரியான தேர்வு என்று நீங்கள் உணரலாம். இந்த சிந்தனை உங்கள் உறவை மேலும் அழகாக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். வேலையைச் செய்பவர்கள் தங்கள் வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கென்று தனி அடையாளம் இருக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இதனால் நல்ல முடிவுகளைப் பெறலாம். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். சுவையான ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுங்கள். வாரத் தொடக்கமும் நடுப்பகுதியும் பயணத்திற்கு ஏற்றது.

துலாம்: மிதமான பலனளிக்கும் வாரமாக அமையும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் வழக்கமானதாக இருக்கும். வாரத் தொடக்கத்தில், ஒரு பயணத்தை மேற்கொள்வீர்கள். உங்கள் பணிகளைக் கையாள்வது பற்றி யோசிக்கலாம். செலவுகள் அதிகரிக்கலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையைச் செய்பவர்கள் வேலை தொடர்பாக பயணம் செய்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற சில புதிய விஷயங்களையும் செய்ய வேண்டியிருக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடல்நலத்தில் சில ஏற்றத் தாழ்வுகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உடல்நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வாரம் பயணம் செய்வது மங்களகரமானதாக இருக்கும்.

விருச்சிகம்: உங்களுக்கு ஒரு நல்ல வாரமாக அமையும். திருமண வாழ்க்கையில் அன்பாகவும் பாசமாகவும் இருப்பீர்கள். இதனால் சில நன்மைகளைப் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஒரு நல்ல பரிசைத் தருவீர்கள். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு பலன் தரக்கூடும். காதலிப்பவர்களுக்கு திருமண வாழ்க்கை கைகூடும். உங்கள் நண்பர்களிடமிருந்து உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும், காதல் வாழ்க்கையை வலுப்படுத்த அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

வாரத் தொடக்கத்தில் பயணம் மேற்கொள்வீர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெற வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பயணம் செல்லலாம். இந்த வாரம் பயணத்திற்கு சிறப்பாக இருக்கும்.

தனுசு: இந்த வாரம் உங்களுக்கு ஒரு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். சிறுசிறு கைகலப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. அத்தகைய சூழ்நிலையில் அமைதியாக இருக்க வேண்டும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு உற்சாகமாக இருக்கும். நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல்நலத்திற்கு நல்லது. நீங்கள் மனதளவில் மிகவும் வலுவாக இருப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும்.

வேலையில் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. உங்கள் ஆசை கனவுகள் நிறைவேறலாம். இந்த வாரம் வியாபாரிகளுக்கு லாபகரமாக இருக்கும். உங்கள் வேலையில் நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். இதனால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் முழுவதும் பயணத்திற்கு ஏற்றது.

மகரம்: மிதமான பலனளிக்கும் வாரமாக அமையும். நீங்கள் குடும்பத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். அவர்களுடன் நேரத்தைச்செலவிடலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். ஒருவருக்கொருவர் புரிந்துக் கொண்டு அன்பை வெளிப்படுத்துவீர்கள். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாரத் தொடக்கத்தில், நீங்கள் வெளியே செல்ல திட்டமிடலாம். செலவுகள் அதிகரிக்கும். லேசான மன அழுத்தமும் இருக்கலாம். தனியாக இருப்பதால் கவலை அதிகரிக்கும்.

வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாளுவீர்கள். உங்கள் கூட்டாண்மை அதிகரிக்கலாம். வேலையில் இருப்பவர்கள் வெற்றியடைவீர்கள். கடினமாக உழைத்தால், வெற்றி நிச்சயம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால், நல்ல முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது.உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வாரத்தின் கடைசி நாள் பயணத்திற்குஏற்றது.

கும்பம்: எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும் வாரமாக உங்களுக்கு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வீர்கள். இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும். வருமான அதிகரிப்பால் மனம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். தொழிலில் முதலீடு செய்வீர்கள். வேலைப்பார்ப்பவர்களுக்கு இந்த வாரம் வழக்கமானதாக இருக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் சில புதிய நபர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் சில புதிய பாடங்களைப் படிக்க விரும்பலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்க, உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் பயனடையலாம். வாரத்தின் கடைசி நாட்கள் பயணத்திற்குஏற்றது.

மீனம்: இந்த வாரம் உங்களுக்கு சிறந்த வாரமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இது உங்கள் உறவுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடும். காதலிப்பவர்கள் இக்கால கட்டத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வேலைக்காக நீங்கள் வெகுமதி பெறுவீர்கள். உங்கள் முதலாளி உங்கள் திறமையால் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளது.

உங்களைப் பாராட்டலாம். நீங்கள் இந்த வாரம் வியாபாரத்திற்காக நிறைய அலைய வேண்டியிருக்கலாம். இருந்தபோதிலும், உங்களுக்கு பிடித்த வேலையைச் செய்வதில் சில தாமதங்கள் ஏற்படலாம். இந்த வாரம் மாணவர்களுக்கு நல்ல வாரமாகும். நீங்கள் படிப்பது எளிதாக இருக்கலாம். இந்த வாரம் உடல்நலம் சிறப்பாக இருக்கும். உடலில்பிரச்சனைகள்இருந்தால், அதில்முன்னேற்றம்காணவாய்ப்புள்ளது.வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

ABOUT THE AUTHOR

...view details