மேஷம்
உங்களது வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். ஏதேனும் புதிய இடங்களுக்குச் செல்ல தயாராக இருக்கவும். ஏதேனும் ஒரு பணியில் மனம் லயித்து வேலை செய்யவும். அதற்காக அளவுக்கு அதிகமான வகையில் வேலை செய்யக் கூடாது. குழு நடவடிக்கைகளில் அனைவரது கவனமும் உங்கள் பக்கம் இருக்கும்.
ரிஷபம்
இன்றைய நாளைப் பொறுத்தவரை, உங்களுக்குத் தொடர்ந்து துன்புறுத்தல் கொடுத்துவந்த ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்களது எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, அவருடன் மோதல் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. அமைதியாகச் செயல்படவும். உங்களது வளமையான எதிர்காலத்தைப் பாதிக்காத வண்ணம் எதிர்வினை ஆற்றவும். மற்றவர்களின் நடவடிக்கைகளால் பொறுமை இழக்காமல் இருப்பது நல்லது. நாகரிகமாகப் பழகும் உங்களது தன்மைதான் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
மிதுனம்
இன்றைய நாளில் நீங்கள் தொழிலைவிட, உடல் நலத்தின் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. நீங்கள் உடற்பயிற்சி செய்ய கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வீர்கள். சந்தைப்படுத்துதல், விளம்பரத் துறையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும். உங்களது சிறந்த சந்தை யுக்தி மூலம், அதிகபட்ச லாபத்தை ஏற்படுத்த முடியும்.
கடகம்
இன்றைய நாளில் நீங்கள் வேடிக்கையான மனநிலையில் இருப்பீர்கள். வேடிக்கை, வம்புப் பேச்சுகள், சிரிப்பு, குதூகலம் நிறைந்து இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நாளின் பிற்பகுதியில், நீங்கள் உங்கள், வழக்கமான அமைதியான நிலைக்குத் திரும்பி, பணியில் கவனம் செலுத்தி வேலையை நிறைவுசெய்வீர்கள்.
சிம்மம்
இன்று நீங்கள் பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஈடுபாட்டுடன் வேலை செய்து பணிகளை நிறைவுசெய்வீர்கள். உங்கள் திட்டத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் வேலை செய்யும் முறையைச் சிறிது மாற்றிக்கொள்வது உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
கன்னி
கூட்டாளித்துவ முயற்சியை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. நீங்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்தால், உங்கள் செயல்திறன் மூலம் மற்றவரைவிட சிறப்பாகச் செயல்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எவருடைய உதவியும் இல்லாமல், நீங்கள் உங்கள் பணியை மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்வீர்கள்.
துலாம்
வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது என்று உங்கள் இயல்பின் காரணமாக, சிறந்த வகையில் பலனடைவீர்கள். உயர் அலுவலர்கள் உங்களது திறமை, செயலாற்றலைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் உங்களுக்குப் பதவி உயர்வு தரும் வாய்ப்பு உள்ளது. யாருடனும் நேரடியாக முதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லதல்ல. ஏனென்றால் இது பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
விருச்சிகம்
உணர்வுகளை வெளிப்படுத்துவது, மிகவும் முக்கியமாகும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன், உங்கள் மனத்தில் இருப்பவற்றைப் பகிர்ந்துகொள்வீர்கள். இது ஒரு வரவேற்கத்தக்கத் தன்மையாகும். உங்கள் இதயத்தில் உணர்ச்சிகள் அதிகம் இருந்தாலும், பொது இடத்தில் பலர் பார்க்கும் வண்ணம் உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் வெளிப்படுத்தக் கூடாது.
தனுசு
இன்று நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் சிக்கிக் கொண்டதைப் போன்ற உணர்வு இருக்கக்கூடும். ஒரே விதமான பணிகளினால் உற்சாகம் இல்லாமல் இருக்கும். கிரக நிலைகளும் மந்தமாக இருப்பதால், இன்று நீங்கள் குதூகலிக்கும் வகையிலான விஷயங்கள் நடக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால் பொறுமையாக இருந்து, நாளை சிறந்த வகையில் தொடங்கும் என்று நம்பிக்கை வைக்கவும்.
மகரம்
நல்ல நாளின் தொடக்கம் சிறந்த வகையில் இருக்கும். வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறையுடன் இன்றைய நாளை நீங்கள் தொடங்குவதால், இது ஒரு சிறந்த நாளாக இருக்கும். உங்களது அர்ப்பணிப்பு, உறுதியான மனப்பான்மை, மற்றவர்களிடமிருந்து உங்களை உயர்வாக காட்டுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. உங்கள் வாழ்க்கைத் துணையுடன், சச்சரவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால், இன்று அந்த மனக்கசப்பு நீங்கும் வாய்ப்பு உள்ளது. இன்றைய நாளைப் பொறுத்தவரை, மண வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும்.
கும்பம்
நிதி நிலைமை, வருமானம் தொடர்பான எண்ணங்கள் அல்லது கவலைகள் உங்கள் மனத்தில் இன்று முழுவதும் இருக்கும். மாலையில் நீங்கள் நண்பர்களுடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களை, நீங்கள் ஒதுக்கியதில்லை என்றாலும், இன்று நண்பர்களின் முக்கியத்துவத்தை நீங்கள் முற்றிலுமாக உணரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
மீனம்
உங்களது மனத்தில் உள்ளவற்றை, உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புவீர்கள். உங்களது சிறந்த தொடர்புத் திறன் காரணமாக, அறிவார்ந்த மக்கள் உங்கள் மீது ஈர்ப்பு கொள்வார்கள். சிறந்த கல்வியாளர்கள், முன்னேற்றமடைந்த மக்களுடன் பணியாற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இது பணியில் நீங்கள் உயர்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க: காந்தியின் நினைவுகளை உலகறியச் செய்து வரும் மங்கம்மாள் மாளிகை!