டெல்லி: கடந்த மே மாதம் இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், இரு தரப்பு ராணுவ உயர்மட்ட அலுவலர்களுடன், இதுவரை எட்டு கட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தை சாதகமானதாக அமைந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா - சீனா இடையே நல்ல உடன்பாடு எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது- நாரவனே - கிழக்கு லடாக்கில் பதற்றம்
இந்திய- சீன நாடுகளுக்கிடையான எல்லைப் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளுக்கிடையே நல்ல உடன்பாடு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக ராணுவத் தளபதி நாரவனே தெரிவித்துள்ளார்.
Army chief hopes for de-escalation of tension in eastern Ladakh
இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் ராணுவப் பிரச்னைகள் தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர், "கிழக்கு லடாக்கில் பதற்றத்தை நீக்குவது மற்றும் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து இந்திய மற்றும் சீன ராணுவத்தினருடன் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பதற்றத்தை தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: போர் பதற்றம்: இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை!