Honour Killing: ஹைதராபாத்(தெலங்கானா):தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நேற்று (மே 4) இரவு 9 மணியளவில் காதல் திருமணம் செய்ததால் சொந்த தங்கையின் கணவரை அண்ணன் ஒருவன் அவன் நண்பர்களுடன் இரும்பு ராடால் தாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் ஹைதராபாத் சரூர்நகர் காவல் நிலையத்தின் எல்லைகுட்ப்பட்ட GHMC முன்னே நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், மார்பள்ளி கிராமத்தைச்சேர்ந்தவர், விழுப்புரம் நாகராஜ். இவர் அருகில் உள்ள கானாபூர் கிராமத்தில் வசித்து வந்த அஸ்ரின் சுல்தானவை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தார். அஸ்ரினும் நாகராஜை விரும்பி வந்தார். அஸ்ரினின் குடும்பத்தார் இவர்களது காதல் விவாகரம் குறித்து அறிந்து நாகராஜை எச்சரித்தனர். நாகராஜ் ஹைதராபாத்தில் உள்ள பெரிய கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இதனையடுத்து அஸ்ரினும் , நாகராஜும் கடந்த ஜனவரி 31 அன்று அவர்களது வீட்டாருக்குத் தெரியாமல் லால் டார்வாசாவில் உள்ள ஆரிய சமாஜ்ஜில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் அவர்களது குடும்பத்தாருக்கு ஹைதராபாத்தில் இவர்கள் தங்கி இருப்பதாக தகவல் சென்றதால், இருவரும் உடனடியாக விசாகப்பட்டினம் சென்றனர். அங்கு அஸ்ரினின் குடும்பம் தங்களை பின் தொடரவில்லை என நினைத்து மீண்டும் 5 தினங்களுக்கு முன் ஹைதராபாத் வந்துள்ளனர்.
வேவு பார்த்த பெண்வீட்டார்: தெலங்கானாவில் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் சரூர் நகரில் உள்ள அனில் குமார் காலனியில் இருவரும் தங்கியுள்ளனர். இவர்களை மறைந்திருந்து நோட்டமிட்ட அஸ்ரினின் அண்ணன் மற்றும் அவனின் நண்பர்கள் நேற்று இருவரும் காலனியை விட்டு வெளிவரும்போது பைக்கில் வந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை கொண்டு கொடூரமாகத் தாக்கினர். இந்த தாக்குதலில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.