தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காட்டுல அவனுக்கு பழக்கம் இல்லை... பன்றியைத் தேடி வனப்பகுதியில் சுற்றிய குடும்பம் - காயப்பட்ட பன்றியை மீட்டு பெண்கள்

புவனேஷ்வர்: வீட்டில் வளர்ந்த காட்டுப் பன்றியை வனத்துறையினர் கொண்டு சென்றதால், அதனைத் தேடி குடும்பத்தினர் காட்டில் சுற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

புவனேஷ்வர்
பன்றி

By

Published : Mar 18, 2021, 6:59 PM IST

ஒடிசா மாநிலம் கெண்டுஜார் (Kendujhar) பகுதியில் வசித்துவருபவர் குந்தலா குமாரி பெந்தே. அவரின் வீட்டு உறுப்பினர்கள் காட்டுப் பன்றி குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். பன்றிக்குட்டிக்கு துடா என பெயர்சூட்டி, குடும்ப உறுப்பினராகவே வளர்த்து வந்துள்ளனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில், வீட்டிற்கு விரைந்த வனத்துறை அலுவலர்கள், காட்டுப் பன்றியை வீட்டில் வளர்ப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி, அதனை வனப்பகுதியில் விடவேண்டும் என கொண்டு சென்றுள்ளனர்.

துடாவின் பிரிவைத் தாங்க முடியாத குந்தலா குடும்பத்தினர் சோகத்திலேயே இருந்துள்ளனர். வீட்டில் வளர்ந்த அவனால், நிச்சயம் காட்டில் இருந்திட முடியாது எனக் கவலைப்பட்டுள்ளனர். தொடர்ந்து, தினந்தோறும் வனப்பகுதியில் குடும்பத்தினர் துடாவை தேடி அலைந்துள்ளனர். அப்போது, துடாவை பார்த்ததாக அப்பகுதி வாசி ஒருவர், குந்தலாவுக்கு தகவல் அளித்துள்ளார்.

பன்றியைத் தேடி வனப்பகுதியில் சுற்றிய தாயும், மகளும்

இதையடுத்து, கிராமத்திலிருந்து 25 கிமீ தொலைவில் அவர் கூறிய இடத்தில், குந்தலாவும் அவரது மகளும் தேடி அலைந்துள்ளனர். அப்போது, உடலில் காயத்துடன் சுற்றும் துடாவை பார்த்து கண்ணீர் விட்டுள்ளனர். உடனடியாக, அதற்குப் பிடித்த உணவைக் கொடுத்துவிட்டு, வீட்டிற்கு அழைத்து வந்து மருத்துவச் சிகிச்சை அளித்துள்ளனர். துடாவின் என்ட்ரி, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:இரண்டாவது மாடில பேய் இருக்கா... 700 ஆண்டுகளாகத் தீராத மர்மம்!

ABOUT THE AUTHOR

...view details