கவர்தா:சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியதில் திருமணமான 2 நாளில் மணமகன் உயிரிழந்தார். இந்த சம்பவம் கவர்தா மாவட்டத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து,ரெங்ககர் போலீசார் கூறுகையில், கவர்தாவின் சாமரி கிராமத்தில் வசித்து வந்த ஹேமேந்திர மெரவி என்பவருக்கு மார்ச் 31ஆம் தேதி திருமணம் நடந்தது.
இந்த திருமணத்துக்கு வந்தவர்கள் அன்பளிப்புகளை வழங்கியிருந்தனர். அந்த வகையில், புதிதாக வாங்கப்பட்ட ஹோம் தியேட்டரும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த ஹோம் தியேட்டரை ஹேமேந்திர மெரவி நேற்று (ஏப்ரல் 2) திறந்து பார்த்துள்ளார். அப்போது அவருடன் உறவிர்களும் இருந்துள்ளனர்.
இதனை பிளக்குடன் இணைத்தபோது, நொடி நேரத்தில் ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியதில் ஹேமேந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் 7 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மீதமுள்ள 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்து காவலர்கள் ஹேமேந்திராவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இந்த ஹோம் தியேட்டர் வெடித்ததற்கான காரணம் கண்டறியப்படவில்லை. தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கேரள ரயில் தாக்குதலில் தீவிரவாத தலையீடா? தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித் திட்டமா? போலீஸ் கையில் சிக்கிய ரெட் டைரி