தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Home Remedies for Stomach Pain in tamil: அடிக்கடி வயிறு வலி வருதா.? இதுகூட காரணமா இருக்கலாம்.! - vayiru vali symptoms in tamil

Home Remedies for Stomach Pain in tamil: அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்

அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்
வயிறு வலி பிரச்சனையா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 2:15 PM IST

சென்னை: வயிற்று வலி என்பது வயிற்றுக்குள் ஏற்படும் தேவையற்ற தொந்தரவுகள் காரணமாக ஏற்படும் உள் வலி. இவை இடுப்பு மற்றும் விலா எலும்புகளுக்கு இடையில் உள்ள வயிறு பகுதியில் ஏற்படும் ஒரு அசௌகரியம். பொதுவாக, வயிற்று வலி என்று நினைக்கிறோம் ஆனால், அது உடலில் உள்ள மற்ற உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனை காரணமாகவே வருகிறது. குறிப்பாக செரிமானப் பிரச்சனை வயிற்று வலிக்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

வயிற்று வலிக்கான காரணங்கள்:

  • மலச்சிக்கல்
  • வயிற்றுப்போக்கு
  • இரைப்பை குடல் அழற்சி
  • வாயு
  • குடல் அடைப்பு
  • இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய்
  • வாந்தி
  • மன அழுத்தம்
  • எரிச்சல் கொண்ட குடல் நோய் அறிகுறி (IBS)
  • செரிமான பிரச்சனைகள்
  • உணவு நச்சு
  • பித்தப்பை கற்கள்
  • சிறுநீரக கற்கள்

நமது வயிற்றில் உள்ள சிறுகுடல், பித்தப்பை, கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், கணையம் மற்றும் பெருங்குடல் போன்ற முக்கிய உறுப்புகளின் இருப்பிடத்தை பொருத்து வலி ஏற்படும் இடங்களில் மாறுபாடு இருக்கலாம். இதுபோன்று எந்த இடத்தில் வலி இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு மருத்துவரை அனுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது அவசியம். ஆனால் இந்த வயிற்று வலிகளை வீட்டு வைத்தியம் மூலம் குறைக்கவும், குணப்படுத்தவும் முடியும். இதை முயற்சித்து பாருங்கள். அப்படியும் வலி குறையாமல் தொடர்ந்து அடிக்கடி வயிற்று வலி வருகிறது என்றால் மருத்துவரை அனுகி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

வயிற்று வலிக்கு வீட்டு வைத்தியம்:

  1. இஞ்சி வயிற்று வலி மற்றும் அஜீரணத்தை சரி செய்கிறது. இதனால், வாந்தி மற்றும் குமட்டல் போன்ற உணர்வைக் குறைக்கிறது
  2. புதினாவை உட்கொள்ளும்போது, குளிர்ச்சியைத் தருகிறது மற்றும் செரிமான பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது.
  3. சீரகத்தை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
  4. ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய பொருட்களை பொடியாக்கி அத்துடன் வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்
  5. ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிற்றை சுத்தப்படுத்தவும், வயிற்றின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
  6. இளநீர் அசிடிட்டி, அல்சர், குடல் அழற்சி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
  7. பெருங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடிப்பதன் மூலம் வாயு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
  8. வெந்தையத்தை பொடித்து ஒரு டம்ளர் மோருடன் சேர்த்து குடித்தால் வயிற்று வலி உடனடியாக குணமாகும்.
  9. தண்ணீரில் பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். எலுமிச்சை சாறு வாயு மற்றும் அஜீரண பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வு தரும்.
  10. தேன் இரண்டு டீ ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கலந்து குடித்து வந்தால் வயிறு வலி குணமாகும்.
  11. கற்றாழை கூழ் எடுத்து அதை மோரில் கலந்து குடித்தால் உடல் சூட்டை குறைத்து வயிற்று வலியை குணமாக்கும்.

வயிற்று வலியை கட்டுப்படுத்த வாழ்வியல் நடைமுறையில் மேற்கொள்ள வேண்டியவை;

  • இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
  • தண்ணீர் மற்றும் பழச்சாறு அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
  • சாப்பிடுவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுங்கள்.
  • பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.
  • மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை முற்றிலுமாக கைவிடுங்கள்
  • தேநீர், காபி அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள்
  • மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
  • துரித உணவுகள் உட்கொள்ளவதை தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

இதையும் படிங்க:தோல் புற்றுநோயை தடுக்கும் சீதாப்பழம்..! அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

ABOUT THE AUTHOR

...view details