தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறுமா? பாஜகவின் திட்டம் என்ன? - Delhi services Bill in Rajya Sabha

தலைநகர் டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகளை நிர்வகிக்கும் டெல்லி சேவைகள் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்ய உள்ளார்.

Amit Shah
Amit Shah

By

Published : Aug 7, 2023, 4:00 PM IST

Updated : Aug 8, 2023, 11:23 AM IST

நாடாளுமன்றம் :டெல்லி சேவைகள் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்ய உள்ளார்.

தலைநகர் டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம், பணியிடை மாற்றம் குறித்த முடிவுகளை எடுக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைப்பது குறித்த அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி சேவைகள் மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிரக்கட்சிகள் வெளிநடப்பிற்கு இடையே டெல்லி சேவைகள் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், டெல்லி சேவைகள் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார். மக்களவையில் மசோதா எளிதாக நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் அவ்வளவு எளிதாக மசோதாவை நிறைவேற்ற முடியாது எனக் கூறப்படுகிறது.

மாநிலங்களவையில் டெல்லி சேவைகள் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு 119 ஆதரவு வாக்குகள் தேவைப்படுகின்றன. அதேநேரம் மாநிலங்களவையில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. 8 இடங்கள் காலியாக உள்ள நிலையில் தற்போது 237 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 112 இடங்கள் உள்ளன. அதேநேரம் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 107 இடங்கள் உள்ளன. இதனால் பாஜக மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

அதேநேரம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, வெளியே உள்ள பிஜூ ஜனதா தளம் (9 இடங்கள்) ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (9 இடங்கள்), மற்றும் தெலுங்கு தேசம் கட்சி (1 இடம்) உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து உள்ளன. இதனால் பாஜகவுக்கு ஒட்டுமொத்த ஆதரவு இடங்கள் 131 ஆக கணக்கிடப்பட்டு உள்ளன. அதனால் மாநிலங்களவையிலும் டெல்லி சேவைகள் மசோதாவை பாஜக வெற்றிகரமாக நிறைவேற்றும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க :அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Last Updated : Aug 8, 2023, 11:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details