குருகிராம் :அரியானாவில் மத ஊர்வலத்தில் வெடித்த வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காவல் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வன்முறைச் சம்பவத்தில் ஏற்பட்ட மோதலில் அதிகளவிலான போலீசார் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ள நூ பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் - ஆல்வார் இடையே வந்த போது இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலையான அந்தப் பகுதியில் இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து இரு தரப்புனர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் மூண்டது. இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் கிடைக்க நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். அப்போதும் கலவரம் அடங்காததால் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர்.
வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து கலவரக்காரர்கள் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காவல் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் போலீசார் தடியடியில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.