ராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை செல்வதைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஏப்ரல் 24 முதல் ஜூன் 14 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 15ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சத்தீஸ்கரின் ராய்ப்பூர், துர்க், பிலாஸ்பூர், சர்குஜா மாவட்டங்களில் வெப்பநிலை 43 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது.