புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் திரையரங்குகள், பொது இடங்களில் 50 விழுக்காடு மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதுச்சேரியில் கரோனா தொற்று காரணமாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நாளை (ஜனவரி 10) முதல் நேரடி வகுப்புகள் (பள்ளிகள்) நடைபெறாது.